ஆங்காங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hong Kong International Airport) உலகின் பரப்பான விமான நிலையங்களில் பன்னிரண்டாவது விமான நிலையமாகும்.[2].
இதனை பேச்சு வழக்கில் செக் லப் கொக் வானூர்தி நிலையம் என்றும் அழைப்பர். அதற்கான காரணம் இவ்வானூர்தி நிலையம் அமையப்பட்டிருக்கும் தீவின் பெயர் செக் லப் கொக் என்பதாகும். இந்நிலையம் ஹொங்கொங்கின் முன்னாள் விமான நிலையமான கை டக் விமான நிலையத்திற்கான மாற்றீடாக கட்டப்பட்டதாகும். இவ்வானூர்தி நிலையம் 1998 ஆம் ஆண்டு தனது சேவையைத் தொடர்ந்ததிலிருந்து குறுகிய காலத்திற்குள் ஸ்கைடெக்ஸ் நிறுவனத்தினரால் வழங்கப்படும் உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதை (Skytrax World Airport Awards) ஏழு முறை தட்டிச்சென்றது.[3][4]
ஹொங்கொங் வானூர்தி நிலையம் உலகின் மிகப்பெரிய பயணிகள் தரிப்பிடத்தை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், 24 மணி நேரச் சேவையையும் சிறப்புடன் வழங்கி வருகின்றது. இவ்விமான நிலையம் ஹொங்கொங் வானூர்தி நிலைய நிர்வாகத்தினரின் பொறுப்பில் இயங்குகின்றது. இது கதே பசிபிக், டிராகன் எயார், ஆங்காங் எக்ஸ்பிரஸ் எயார்வேசு, ஆங்காங் ஏர்லைன்சு, சீனா ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், ஏர் ஆங்காங் (சரக்கு) மற்றும் ஆசியா ஜெட்(தனியார்) போன்ற வானூர்திச் சேவைகளை தன்னகத்தே கொண்டு, 90 வான்வழிப் போக்குவரத்துக்களை உலகின் 150 நகரங்களூடாக வழங்குகின்றது. 2008 ஆம் ஆண்டு, அறிக்கைப்படி உலகின் பரப்பான சரக்கு ஏற்றிறக்கும் வானூர்தி நிலையங்களில் இது இரண்டாவது வானூர்தி நிலையமாகும். கணக்கெடுப்பின் படி 3,660,901 டொன் சரக்குகள் இவ்வானூர்தி நிலையத்து ஊடாக ஏற்றி இறக்கப்பட்டுள்ளன.[5].
வானூர்தி நிலைய வரலாறு
தற்போதைய செக் லப் கொக் பன்னாட்டு வானூர்தி நிலையம், முன்பு இயங்கி வந்த கை டக் வானூர்தி நிலையத்திற்கான மாற்றீடாக கட்டப்பட்டதாகும். 1925 ஆம் ஆண்டு முதல் 1998 யூலை 6 ஆம் நாள் வரை ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையமாக கை டக் வானூர்தி நிலையம் (Hong Kong Kai Tak International Airport) இயங்கி வந்தது. இது ஹொங்கொங் தீவில் இருந்து சில மைகளுக்கு அப்பால் கவ்லூண் தீபகற்பப் பகுதியில் கவுலூன் பே எனும் குடா கடலோடு இணைந்த நிலப்பரப்பில் அமைந்திருந்தது. அவ்வானூர்தி நிலையம் மலைகளும் மாடிமனைகளும் சூழ நடுயில் அமைந்திருந்தது. இதனால் வானூர்தி தரையிறக்கம் தொடர் ஆபத்துக்களுக்கு உள்ளாகின. பல வானூர்தி விபத்துக்களும் ஏற்பட்டன. ஒரு முறை வானூர்தி ஓடு பாதையிலிருந்து தடம் மாறி கடலிலும் வீழ்ந்தது. இவ்வாறு இவ்வானூர்தி நிலையம் பாதுகாப்பு அற்றதாகவும் இருந்தது. அதேவேளை ஹொங்கொங் நாட்டின் படுவேகமான பொருளாதார வளர்ச்சியினால், பன்னாட்டு வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையும் ஹொங்கொங்கில் அதிகரித்த வண்ணம் இருந்தது. இப்பயணிகளுக்கான முழுமையான சேவையை வழங்க முடியாத இடப்பற்றாக்குறையும் போதிய வசதியின்மையும் ஏற்பட்டன. பொதிகள் ஏற்றி இறக்குவதற்கான வசதிகளும் போதுமானதாக இருக்கவில்லை. வானூர்தி ஓடுபாதையும் ஒன்று தான் இருந்தது. எனவே ஹொங்கொங்கிற்கு இடவசதி கூடியதும் நவீன வசதிகள் நிறைந்ததுமான ஒரு புதிய வானூர்தி நிலையத்தின் தேவையை தோற்றுவித்தது.
புதிய வானூர்தி நிலைய திட்டவடிவமைப்பு
Operations and Statistics
Passenger movements
1998
28,631,000
2004
37,142,000
1999
30,394,000
2005
40,740,000
2000
33,374,000
2006
44,443,000
2001
33,065,000
2007
47,783,000
2002
34,313,000
2008
48,582,000
2003
27,433,000
Airfreight movements in tonnes
1998
1,628,700
2004
3,093,900
1999
1,974,300
2005
3,402,000
2000
2,240,600
2006
3,580,000
2001
2,074,300
2007
3,742,000
2002
1,637,797
2008
3,627,000
2003
2,642,100
Aircraft movements
1998
163,200
2004
237,300
1999
167,400
2005
263,500
2000
181,900
2006
280,000
2001
196,800
2007
295,580
2002
206,700
2008
301,000
2003
187,500
Capacity
Passenger (current)
45,000,000
Passenger (ultimate)
87,000,000
Cargo (current)
3m tonnes
Cargo (ultimate)
9m tonnes
Apron (current)
96
Number of destinations
International (air)
154
International (water)
6
வானூர்தி நிலையத்திற்கான திட்டவரைபுகள் தயாராயின. வானூர்தி நிலைய வடிவமைப்பு பிரித்தானியாவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் சேர் நோர்மன் பொஸ்ட்டர் (Sir Norman Foster) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவரே இலண்டன் ஸ்டான்ஸ்டட் வானூர்தி நிலையத்தையும் வடிவமைத்தவரும் ஆவர். வானூர்தி நிலையத்துக்காக ஹொங்கொங் தீவில் இருந்து 22 மைல்களுக்கு அப்பால் தென்சீனக்கடலில் அமைந்திருந்த செக் லப் கொக் (Chek Lap Kok) எனும் தீவு தெரிவுசெய்யப்பட்டது. இத்தீவு ஒரு மலைத்தொடராகும். வானூர்தி நிலைய கட்டுமான பணிகள் ஆரம்பமாகின. உலகின் பாரிய கட்டுமான பணிகளில் இதுவும் ஒன்றாகும். தலைச்சிறந்த கட்டிடக் கலைஞர்கள் இணைந்து இந்த பாரிய திட்டத்தை கையிலெடுத்தனர். கட்டுமானப்பணி நிறைவு பெற தசாப்தங்கள் ஆகும் என திட்டக்குழு அறிவித்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ ஏழு ஆண்டுகள். பணிகள் துரித கெதியில் நடந்தன.
தரைத்தோற்ற உருவாக்கம்
தெரிவு செய்யப்பட்ட செக் லப் கொக் தீவு ஒரு கற்பாறைகள் நிறைந்த ஒரு மலைத்தொடராகும். முதலில் இம்மலைத்தொடரை சமதரையாக்க வேண்டும். எனவே பாறை வெடிகளால் மலைத்தொடர் சிதறடிக்கப்பட்டது. சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இன்னுமொரு தீவும் இருந்தது. அதன் பெயர் லாம் ச்சாவ் (Lam Chau) என்பதாகும். அத்தீவும் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது. இவ்வாறு தகர்க்கப்பட்ட இரண்டு தீவுகளின் அனைத்து வளங்களும் கல், மண், மற்றும் கழிவுகள் உட்பட அனைத்தும் இரண்டு தீவுகளுக்கும் இடையிலான கடல் பரப்பை நிரப்ப பயன்படுத்தப்பட்டன. இதுவும் உலகில் செயற்கையாய் கடலை நிரப்பும் பாரிய திட்டங்களில் ஒன்றானது. இரண்டு தீவுகளும் இடையில் இருந்த கடல் பரப்பும் செயற்கையாய் நிர்மானிக்கப்பட்டு ஒரே தீவாக "செக் லாப் கொக்" எனும் பெயர் பெற்றது. இதனால் இதனை செயற்கை தீவு (Artificial Island) என்றும் அழைக்கப்படுகின்றது. செக் லப் கொக் தீவின் நிலப்பரப்பு 3.02 கிலோ மீட்டராகவும் லாம் சாவ் தீவின் நிலப்பரப்பு 0.08 கிலோ மீட்டராகவும் இருந்தது. இப்பொழுது இந்த பாரிய கடல் நிரப்பும் பணியூடாக இந்த செயற்கை தீவின் முழு நிலப்பரப்பும் 12.48 கிலோ மீட்டர்களானது.
அதிநவீன தொழில் நுட்பம்
வானூர்தி நிலையப் பணிகள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செய்யப்பட்டது. பயணிகள் மண்டபம் போன்றன தொஅலி இயக்கி மூலமாகவே அமைக்கப்பட்டன. அது உலகின் மிகப்பெரிய பயணிகள் மண்டபமானது. வானூர்தி நிலையத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நவீன தொழில்நுட்பத்துடன் வசதியானதும் வடிவானதுமாக வடிவமைக்கப்பட்டன.
போக்குவரத்து பாதைகள்
அடுத்தகட்ட நடவடிக்கையாக இவ்வானூர்தி நிலையத்தில் இருந்து போக்குவரத்து பாதைகள் அமைக்கும் திட்டம் தயாரானது. வானூர்தி நிலைத்தில் இருந்து ஹொங்கொங் தீவிற்கான போக்குவரத்து சேவையை, அதிவேக போக்குவரத்து சேவையாக மாற்றும் திட்டம் உருவானது. ஹொங்கொங் நாட்டின் மிகப் பெரிய தீவாகிய லந்தாவ் தீவின் வட கடற்கரை ஊடாக பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டன. லந்தாவ் தீவின் கடற்கரையும் கற்பாறைகள் நிறைந்ததாகவே காணப்பட்டது. எனவே கடற் கரையோடு அண்டிய கடல் பகுதியையும் செயற்கையாய் நிரப்பி பாதை அமைக்கப்பட்டது. மலையடிவாரத்தில் இருந்து கிட்டத்தட்ட அரை மைல் அகன்ற ஒரு செயற்கை நிலப்பரப்பு பல கிலோ மீட்டர் நீளத்திற்கு உருவானது. இச்செயற்கை நிலப்பரப்பு பாதையில் வாகனப் போக்கு வரத்துக்கும் தொடருந்து போக்குவரத்துக்குமாக வடிவமைப்பட்டன. இப்பாதை செக் லாப் கொக் தீவில் இருந்து லந்தாவ் வட கடற்கரையூடாக அமைக்கப்பட்டது. லந்தாவு தீவின் முடிவில் இருந்து கவ்லூண் நிலப்பரப்புக்கு இடையில் நீண்ட கடல் பரப்பு இருந்தது. இதற்கு இன்னுமொரு பாரிய நடவடிக்கை திட்டமிடப்பட்டது.
சிங் மா பாலம் திட்டம்
ஆம்! கடலுக்கு மேல் பாலம் அமைக்கும் திட்டமே அது. லந்தாவ் தீவிற்கும் கவ்லூண் நிலப்பரப்புக்கும் இடையே சிங் யீ தீவு, மற்றும் மா வான் தீவு எனும் இரண்டு தீவுகள் இருந்தன. இத்தீவுகளும் மலைக்குன்றுகளாகவே இருந்தன. எனவே இத்தீவின் மலைக்குன்றுகளுக்கும் மேலாக உயரமாகவே பாலம் அமைக்கப்பட்டது. இன்று இப்பாலம் இத்தீவுகளின் மலைமுகடுகளை முத்தமிட்டவாறு நீண்டு செல்வதைக் காணலாம்.
இயற்கை அனர்த்தம் (தைப்பூன்)
இப்பாலம் அமைக்கும் திட்டத்தை வடிவமைத்தவர்களுக்கு, ஹொங்கொங் அடிக்கடி எதிர்நோக்கும் இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான தைப்பூன் சுழல்காற்றின் வேகத்திற்கு இப்பாலம் எப்படி தாக்குப்பிடிக்கும் எனும் கேள்வியையும் அதனால் ஏற்படும் அபாயத்தையும் தோற்றுவித்தது. அதனால் தைப்பூன் சுழல் காற்றை எதிர்கொள்ளும் வகையில் கட்டிட கலைஞர்களால் திட்டம் மாற்றீடு செய்யப்பட்டது. சுழல் காற்றை எதிர்கொள்ளும் வகையில் இப்பாலத்தை இரட்டைமாடி மேம்பாலமாக நிறையுடன் கட்டுவதற்கு முடிவானது.
இரட்டைமாடி பாலம்
சிங் மா பாலம் இதன் நீளம் (4,518 அடிகள்) 1,377 மீட்டர்களாகும். கடல் மட்டத்தில் இருந்து உயரம் (676 அடிகள்) 206 மீட்டர்களாகும். இப்பாலத்திற்கு சிங் மா பாலம் என பெயரிடப்பட்டது. இதுவே இன்று உலகில் நீளமான முதல் இரட்டைமாடி பாலமாகும். உலகில் நீளமான பாலங்களில் ஏழாவது பாலமாகும். (World's Seventh Longest Bridge) பாலத்தின் அளவில் இதுவே உலகில் உள்ள பாலங்களில் மிகப் பெரிய பாலமுமாகும். இப்பாலத்தின் அகலம் (135 அடிகள்) 41 மீட்டர்களுமாகும். போவதற்கான மூன்று, வருவதற்கான மூன்று என, ஒரு தளத்தில் ஆறு பாதைக் கோடுகள் உள்ளன. பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிப்பதற்கு மேல்மாடி பாதைகளும், தொடருந்து மற்றும் அதிபார ஊர்திகள் பயணிப்பதற்கு கீழ்மாடி பாதைகளும் உள்ளன. மேல்மாடி பாதையில் பயணிப்போர் வெளிக்காட்சிகளை பார்த்த வண்ணம் பயணிக்கலாம். கீழ்மாடியில் செல்லும் வாகணங்கள் எந்த வெளிப்புரக் காட்சியையும் பார்க்க முடியாதவாறு சுரங்கப்பாதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.
கடலடி சுரங்கப்பாதை
பாலம் அமைக்கும் திட்டத்துடன் கவ்லூண் பக்க நிலப்பாதைத் திட்டமும் கவ்லூண் முகப்பு வரையும் முடிந்தாயிற்று. அடுத்து, கவ்லூண் நிலப்பரப்பில் இருந்து ஹொங்கொங் தீவுக்கான பாதை தேவை. அதற்கான இன்னுமொரு பாரிய நடவடிக்கை ஆரம்பமானது. அது கடலுக்கு அடியிலான சுரங்கப் பாதை. சுரங்கத்திற்கான பெயர் துறைமுக குறுக்குச் சுரங்கம் எனப் பெயரிடப்பட்டது. அதற்கான திட்டப்பணியும் ஆரம்பமானது. வேலைத்திட்டங்கள் மும்முரமாக நடைபெற்றவண்ணம் இருந்தன. திடீரென இப்பாரிய திட்டங்கள் இடைநிறுத்த வேண்டி நிலை ஏற்பட்டது.
ஆட்சி மாற்றம்
பிரித்தானியரின் ஆட்சியில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் இருந்த ஹொங்கொங் 1997 யூலை சீனாவிடம் கையளிக்கப்பட்டது. இதுவும் வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. ஆம்! திறந்த பொருளாதார கொள்கையுடைய ஒரு முதாளித்துவ நாடு, உலகின் முதன்முறையாக தமது ஆட்சிப்பொருப்பை ஒரு கம்யூனிச ஆட்சியாளரிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வாகும். இதனால் முடியும் தருவாயில் இருந்த விமான நிலைய கட்டுமானப் பணியும் இடைநிறுத்தப்பட்டு விடுமோ எனும் குழப்பம் எல்லோரிடமும் எழுந்தது. ஆனால் சீன நிர்வாகம் அத்திட்டத்தை தொடர்ந்து செய்து முடிக்க அனுமதியளித்தது.
அதிவேக சொகுசு தொடருந்து சேவை
இந்த விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங் தீவுக்கு அதிவேக சொகுசுத் தொடருந்து சேவையும் (MTR) ஆரம்பிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங் தீவுக்கான தூரம் 22 மைல்கள். இத்தூரத்தை 23 ன்றே நிமிடங்களில் இத்தொடருந்து சென்றடயக்கூடியது. இடையே மூன்று தொடருந்து நிறுத்தகங்களில் நின்றே இத்தொடருந்துகள் 23 நிமிடத்தில் ஹொங்கொங் தீவை சென்றடைகின்றன என்பது சிறப்பு. 12 நிமிடங்களுக்கு ஒரு தொடருந்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர பேருந்து, மகிழூந்து சேவைகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சீனப் பெருநிலத்தவர்களுக்கான போக்குவரத்து
சீன பெருநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இறங்கி தென்சீனா செல்வதற்கென கடல் வழி அதிவேக படகு சேவைகள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளன. ஹொங்கொங் உள் செல்ல வேண்டுமானால் வீசா அனுமதி பெறவேண்டும்.
வானூர்தி நிலைய சேவை ஆரம்பம்
இவ்வாறு 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாரிய விமான நிலைய கட்டுமானப்பணிகள் ஆறு ஆண்டுகளாக கடுகதியோட்டம் ஓடி 1998 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 1998 யூலை 6 ஆம் நாள் காலை 6. 45 க்கு கத்தே பசுபிக் (Cathay Pacific's CX889) விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து செக் லப் கொக் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் சேவை ஆரம்பமானது.
இன்று உலகில் மிகப்பெரிய வானூர்தி நிலையக் கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும். பயணியர் கூடங்களில் மிகவும் அகன்றதும் பெரியதுமாகும். இவ்வானூர்தி நிலையம் Cathay Pacific, Dragonair, Hong Kong Express Airways, Hong Kong Airlines, Air Hong Kong (cargo) and Asia Jet (private). பெயர்களில் 90 வானூர்திகளை உலகின் 150 நகரங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 650 வானூர்திகள் இந்த வானூர்தி நிலையத்திற்கு வந்து போவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 47.8 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தித்தளத்தை பயன்படுத்துவதாகவும் புள்ளிவிபர அறிக்கைகள் கூறுகின்றன.
இவ்வானூர்தி நிலைய பணியாளர்களாக 60,000 பேர்கள் பணியில் உள்ளனர். ஹொங்கொங்கின் பொருளாதாரத் துறையில் இந்த வானூர்தி நிலையம் பிரதான அங்கம் வகிக்கின்றது.
உலகில் சிறந்த வானூர்தி நிலைய விருது
1998 ம் ஆண்டு தனது முதல் சேவையை ஆரம்பித்ததிலிருந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் உலகில் தலைச் சிறந்த வானூர்தி நிலையத்திற்கான (World’s Best Airport) ஸ்கைடெக்ஸ் நிறுவனத்தினரால் நடாத்தப்படும் தேர்வில் ஸ்கைட்ரெக்சின் உலகில் சிறந்த வானூர்தி நிலைய விருதை (SKYTRAX’S WORLD AIRPORT AWARDS) ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஏழு தடவைகள் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிறந்த சரக்கு ஏற்றி இறக்கும் துறையாகவும் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் விளங்குகின்றது. உலகில் இரண்டாவது அதிக சரக்கு ஏற்றி இறக்கும் வானூர்தி நிலையமாகவும் விளங்குகின்றது. மிகவும் அகன்றதும் பெரியதுமான பொதிகள் பெறும் மண்டபத்தையும் இது கொண்டுள்ளது.
↑Airports Council International (2009-07-28). "Passenger Traffic 2008 FINAL". Airports Council International. Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
↑Airports Council International (2009-07-28). "Cargo Traffic 2008 FINAL". Airports Council International. Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.