செக் லொப் கொக் தீவு

செக் லொப் கொக் தீவையும், லாம் ச்சாவ் தீவையும் இணைத்து, இடையே உள்ள கடல் பரப்பை செயற்கையாக நிரப்பி, உருவாக்கப்பட்ட ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்தின் நில அமைவிடம்
செக் லொப் கொக் தீவு, விமான நிலையத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களின் பின்னரான காட்சி

செக் லொப் கொக் (Chek Lap Kok) என்பது ஹொங்கொங்கில் முன்னாள் இருந்த ஒரு தனித் தீவாகும். இத்தீவு ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கான தரை உருவாக்கப் பணியின் போது, ஹொங்கொங்கில் இருந்த இன்னொரு குறுந்தீவான லாம் ச்சாவ் தீவு இரண்டுக்கும் இடையில் இருந்த கடல் பரப்பு ஒரு பாரியத் திட்டத்தின் ஊடாக செயற்கையாய் நிரப்பப்பட்டு, இரண்டு தீவுகளையும் ஒன்றிணைத்து ஒரு பெரியத் தீவாக மாற்றம் பெற்றது. அதனூடாகவே ஹொங்கொங் விமான பன்னாட்டு நிலையத்திற்கான 12.48 கி.மீ2 நிலப்பரப்பு பெறப்பட்டது. இந்த நிலப்பரப்பில் தான் தற்போதைய ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

"செக் லொப் கொக் தீவு" இருந்த இடமென்பதால், ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு செக் லொப் கொக் பன்னாட்டு விமான நிலையம் எனும் பெயரும் வழக்கில் உள்ளது.

இத்தீவு மக்கள்

இத்தீவில் வசித்த மக்கள் மீனவர்களாகவும், விவசாயிகளாகவும் இருந்தனர். அவர்கள் ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கான கட்டுமாணப் பணிகள் ஆரம்பமானவுடன், அவர்களை இத்தீவுக்கு அருகாமையில் இருந்த இன்னொரு பெரிய தீவான, லந்தாவு தீவின் ஒரு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.

முன்னைய வரலாறு

இந்தத் தீவில் புதிய கற்கால (Neolithic) மனிதர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்ததற்கான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப்பெற்றதாக அறியமுடிகிறது.

இதனையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!