லாம் ச்சாவ் தீவு (Lam Chau Island) ஹொங்கொங் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பில் இருந்த ஒரு தீவாகும். இது ஹொங்கொங் தீவில் இருந்து கிட்டத்தட்ட 22 மைல்களுக்கு அப்பால் தென்சீனக் கடலில் அமைந்திருந்தது. இதன் நிலப்பரப்பு 0.08 கிலோ மீட்டர் மட்டுமே கொண்ட ஒரு குறுந்தீவாகும்.
1990 ஆம் ஆண்டு இத் தீவு ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கான தரை உருவாக்கப் பணியின் போது, இத்தீவில் இருந்த மலைக்குன்றுகள் தரைமட்டமாக்கப்பட்டு, சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த இன்னொரு தீவான செக் லொப் கொக் தீவு உடன் இணைக்கப்பட்டது. இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு, பாரிய கடல் நிரப்பும் திட்டம் ஊடாக நிரப்பியே இரண்டு தீவுகளையும் இணைக்கப்பட்டன. இணைத்தப் பின்னரான நிலப்பரப்பளவு 12.48 கி.மீ2 கிலோ மீட்டர்களாகும். இந்த நிலப்பரப்பில் தான் தற்போதைய ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த "லாம் ச்சாவ் தீவு" ஹொங்கொங் அபிவிருத்தி திட்டங்களினால் மறைந்து போன தீவுகளில் ஒன்றாகும். இது தற்போது ஹொங்கொங்கின் முன்னாள் தீவுகள் எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ளது.