Warning : Value not specified for "common_name "
ரேவா கந்தா முகமை
பிரித்தானிய முகமை
1811–1937
→
Location of ரேவா மற்றும் குஜராத் முகமையின் வரைபடம்
வரலாறு
•
நிறுவப்பட்டது
1811
•
பரோடா மற்றும் குஜராத் அரசுகளின் முகமை
1937
பரப்பு
•
1901
12,877 km2 (4,972 sq mi)
Population
•
1901
4,79,065
மக்கள்தொகை அடர்த்தி
37.2 /km2 (96.4 /sq mi)
பிரித்தானிய இந்தியாவின் ரேவா கந்தா முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்களின் வரைபடம்
ரேவா கந்தா முகமையின் வரைபடம், ஆண்டு 1878
ரேவா கந்தா முகமை (Rewa Kantha ) பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை மேல் நிர்வாகம் செய்யும் அரசியல் முகமை ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தில் 150 மைல் நீளம் கொண்ட மால்வா மலைத்தொடரில் அமைந்த தப்தி ஆறு முதல் நர்மதை ஆற்றைத் தாண்டி வடக்கே மாகி ஆறு பாயும் இடம் வரையிலுள்ள சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கிறது. [ 1] [ 2] இந்த முகவர், மாவட்ட ஆட்சித் தலைவர் போன்று செயல்படுவார். ரேவா கந்தா முகமையின் தலைமையிடம் கோத்ரா நகரம் ஆகும். 12877 சதுர கிலோ மீட்டர் பரப்பள்வு கொண்ட ரேவா கந்தா முகமையின் 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 4,79, 065 ஆகும்.
வரலாறு
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் (1817 – 1818) பின்னர் சுதேச சமஸ்தானங்கள் தங்கள் இராச்சியத்தின் பாதுகாப்பிற்கு, தாமாக முன்வந்து பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றனர்.[ 3]
ரேவா கந்தா முகமை 4,971.75 சதுர மைல் பரப்பளவில் 3,412 கிராமங்களும், 479,055 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்த முகமையிலிருந்து நில வரியாக ஆண்டிற்கு ரூபாய் 20,72,026 பரோடா அரசு மூலம் பிரித்தானியவின் ரேவா காந்தா முகமை வசூலித்தது.
1937-ஆம் ஆண்டில் ரேவா காந்தா முகமையின் கீழிலிருந்த சுதேச சமஸ்தானங்களை , பரோடா அரசுடன் இணைத்து பரோடா மற்றும் குஜராத் முகமையின் கீழ் கொண்டு வரப்பட்டது. [ 4] 1944-ஆம் ஆண்டில் இது பரோடா, மேற்கு இந்தியா மற்றும் குஜராத் அரசுகளின் முகமை எனப்பெயரிடப்பட்டது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ரேவா காந்தா முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்கள் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1960-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ரேவா காந்தா முகமையின் பகுதிகள் புதிய குஜராத் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.
ரேவா காந்தா முகமையின் கீழ் 61 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அவைகளில் ஐந்து தவிர ஏனையவைகள் பெரும்பாலும் மிகச்சிறியதாகும். அவைகளில் பெரிய சமஸ்தானம் ராஜ்பிப்லா இராச்சியம் ஆகும்.[ 2] [ 5]
இந்த முகமையின் கீழிருந்த ஐந்து முதல் நிலை சமஸ்தானங்களில் ராஜ்பிப்லா இராச்சியம் , சோட்டா உதய்பூர் இராச்சியம் , சந்த் சமஸ்தானம் , லூனாவாடா சமஸ்தானம் மற்றும் பாலசினோர் சமஸ்தானம் ஆகும். இந்த முகமையின் கீழிருந்த ஐந்து சமஸ்தானங்களின் பரப்பளவு 12,877 km2 (4,972 sq mi) ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 4,79,065. பொது மக்களில் பெரும்பாலோனர் பில் மக்கள் மற்றும் கோலி மக்கள் ஆவர்.[ 6]
ரேவா கந்தா கோட்டம்
(கோத்ரா அரசியல் முகவரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சமஸ்தானங்கள்)
ராஜ்பிப்லா இராச்சியம் , (முதல் நிலை) பட்டம்-மகாராஜா, 13 பீரங்கி குண்டுகள் மரியாதை
சோட்டா உதய்பூர் இராச்சியம் , முதல் நிலை, பட்டம்-மகாராஜா,11 பீரங்கி குண்டுகள் மரியாதை
பாரியா சமஸ்தானம் , இரண்டாம் நிலை, பட்டம்- மகாராவுல், 9 பீரங்கி குண்டுகள் மரியாதை
லூனாவாடா சமஸ்தானம் , இரண்டாம் நிலை, பட்டம்- மகாராணா, 9 பீரங்கி குண்டுகள் மரியாதை
பாலசினோர் சமஸ்தானம் , இரண்டாம் நிலை, பட்டம்-நவாப், 9 பீரங்கி குண்டுகள் மரியாதை
சந்த் சமஸ்தானம் , இரண்டாம் நிலை, பட்டம்- மகாராணா, 9 பீரங்கி குண்டுகள் மரியாதை
பீரங்கி குண்டுகள் மரியாதை இல்லா சமஸ்தானங்கள்:
சஞ்செலி சமஸ்தானம் - மூன்றாம் நிலை
கடனா இராச்சியம், மூன்றாம் நிலை
ஜாம்பக்கோடா இராச்சியம், மூன்றாம் நிலை
மேவா பகுதிகள்
பீரங்கி குண்டுகள் மிரியாதை இல்லாத மேவா பிரதேசத்தின் கிராமிய சிறு எஸ்டேட்கள் எனும் சமஸ்தானங்கள் சங்கேதா மற்றும் பாண்டு பகுதிகளில் உள்ளது. அவைகள்:
சங்கேதா பகுதிகள்
(நர்மதை ஆறு அருகில் உள்ள எஸ்டேட்கள்)
மாண்ட்வா இராச்சியம், மூன்றாம் நிலை (தனிநபராக) / நான்காம் நிலை (பொதுவாக)
காட் போரியத் இராச்சியம், மூன்றாம் நிலை (தனிநபராக) / நான்காம் நிலை (பொதுவாக)
சானோர் இராச்சியம், நான்காம் நிலை
வஜ்ஜிரா இராச்சியம், நான்காம் நிலை
வனமாலா இராச்சியம் நான்காம் நிலை
நன்கம் இராச்சியம், ஐந்தாம் நிலை
நஸ்வாடி இராச்சியம்
உச்சாட் இராச்சியம்
அகர் இராச்சியம்
பலஸ்னி இராச்சியம்
பிலோடியா:
வசன் வீர்பூர்
வோரா மேவா
வசன் சேவாடா
அல்வா மேக்வா
சோரங்லா
சிந்தியாபுரா
பிஹோரா
வாடியா
தூத்பூர்
ராம்புரா, நீமூச்
ஜிரால் காம்சோலி
சுதேசர்
பண்டலாவாடி
அக்பர் கான் மேவா
கேசர் கான்
ரேகன் மேவா
நலியா
பாண்டு பகுதிகள்
ரேவா காந்தா முகமைக்காக பரோடா இராச்சியத்திற்கு திறை செலுத்தும் மாகி ஆறு அருகே உள்ள சிறு சமஸ்தானங்கள் :
பதர்வா
உமேதா
சிகோரா
பாண்டு
சாலியர்
மேவ்லி
கனோடா
பொய்ச்சா
தாரி
இத்வாட்
கோதார்டி
லிட்டர் கோத்தா
அமர்பூர்
வாக்தாப்பூர்
ஜெஸ்சர்
மோகா பாகி னு மூவாடு
கல்சா பாகி னு மூவாடு
ராஜ்பூர்
மோதி வார்னோல்
ஜம்கா
நானி வார்னோல்
வர்னோல்மால்
அங்கத்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்