ஜாப்ராபாத் இராச்சியம் (Jafarabad, or Jafrabad State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் ஜாப்ராபாத் ஆகும். இது கிழக்கு ஆப்பிரிக்காவின் சித்தியர்கள் ஆண்ட ஜன்சிரா இராச்சியத்தின் வசீருக்குட்பட்ட சிற்றரசு ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் உள்ள அம்ரேலி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாப்ராபாத் இராச்சியம் 68 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 12,097 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.
வரலாறு
ஜாஞ்சிரா இராச்சியத்தின் கீழ் சிற்றரசாக இருந்த ஜாப்ராபாத், 1759-ஆம் ஆண்டில் தன்னாட்சியுடைய இராச்சியமாக நவாப்புகளால் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இந்த இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜாப்ராபாத் இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
- 1803 – 1826: முதலாம் இப்ராகிம் கான்
- 1826 – 31 ஆகஸ்டு 1848: முகமது கான்
- 31 ஆகஸ்டு 1848 – 28 சனவரி 1879: மூன்றாம் இப்ராகிம் கான்
- 28 சனவரி 1879 – 2 மே 1922: அகமது கான்
- 28 சூன் 1879 – 11 அக்டோபர் 1883: .... – அரசப்பிரதிநிதி
- 2 மே 1922 – 15 ஆகஸ்டு 1947: இரண்டாம் முகமது கான்
- 2 மே 1922 – 9 நவம்பர் 1933: இராணி குல்சும் பேகம் -அரசப்பிரதிநிதி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்