மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Harry Reid International Airport, (ஐஏடிஏ: LAS, ஐசிஏஓ: KLAS, எப்ஏஏ LID: LAS)) ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் மற்றும் கிளார்க் கவுன்ட்டி பகுதிகளுக்கு சேவை வழங்கும் முதன்மை வணிகமய வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் லாஸ் வேகஸ் நகரின் மையத்திலிருந்து ஐந்து மைல்கள் (8 கி.மீ.) தெற்கில் கிளார்க் கவுன்ட்டியில் உள்ள அரசமைப்பில்லா பாரடைஸ் பகுதியில் அமைந்துள்ளது. 2,800 ஏக்கர்கள் (1,100 ha) பரப்பளவில் விரிந்துள்ள இந்த நிலையத்தில் நான்கு ஓடுபாதைகள் உள்ளன. மெக்காரன் நிலையத்தின் உரிமையாளராக கிளார்க் கவுன்ட்டி உள்ளது; கிளார்க் கவுன்ட்டி வான்போக்குவரத்து துறையால் (DOA) இயக்கப்படுகிறது. இந்த வானூர்தி நிலையம் பெப்ரவரி 2012 இலிருந்து இசுபிரிட் ஏர்லைன்சின் பராமரிப்பு தளமாக உள்ளது.[3] முன்னாள் நெவாடா செனட்டர் பேட் மெக்காரன் நினைவாக இந்த வானூர்தி நிலையம் பெயரிடப்பட்டுள்ளது.
2012இல் மெக்காரன் பயணிகள் போக்குவரத்தில் உலகின் 24வதாகஉள்ளது. இந்த நிலையம் வழியே 2012இல் 40,799,830 பயணிகள் பயணித்துள்ளனர்.[1] 527,739 வானூர்தி ஏற்றங்களையும் இறக்கங்களையும் கையாளும் இது வானூர்தி போக்குவரத்தின் அடிப்படையில் உலகின் 8வது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[1] மெக்காரன் தனது நிதித்தேவைகளை தானே சம்பாதித்துக் கொள்வதால் கவுன்ட்டியின் பொதுநிதியிலிருந்து எந்த மானிய உதவியும் பெறுவதில்லை.[4]
{{cite web}}
|archive-date=