குறிப்பு:பிற்றுமின் மற்றும் அசுபால்ட்டு என்ற சொற்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. அசுபால்ட்டு கலந்த கான்கிறீற்று மட்டுமே இதற்கு விலக்காக உள்ளது. இக்கட்டுரையில் "அசுபால்ட்டு/பிற்றுமின்/நிலக் கீல்" என்றச் சொற்கள் ஒரே பொருளுடையனவாக பாவிக்கப்பட்டுள்ளது.
அசுபால்ட்டு/பிற்றுமின்னின் முதன்மைப் பயன்பாடு சாலை கட்டமைப்பாகும். இதனை சாலையிடப் பயன்படுத்தப்படும் சல்லிக்கற்களை பிணைக்கும் பிசினாகப் பயன்படுத்தி அசுபால்ட்டு பைஞ்சுதை உருவாக்கப்படுகிறது. அடுத்து சாய் கூரைகளின் இணைப்புக்கள், சமநிலை மேற்கூரைகளின் தளங்களில் நீர்புகா கட்டமைப்புக்களுக்கு அசுபால்ட்டு பயன்படுத்தப்படுகிறது.
இயற்கையில் கிடைக்கும் அசுபால்ட்டு/பிற்றுமின் சிலநேரங்களில் "கச்சா பிற்றுமின்" எனப்படுகிறது. இதன் பிசுக்குத்தன்மை குளிர்ந்த கரும்புப்பாகு போன்றுள்ளது[2][3]பாறை எண்ணெயை 525 °C (977 °F)]க்கு காய்ச்சி வடித்த பிற்றுமின் "தூய்மித்த பிற்றுமின்" எனப்படுகிறது.
↑"Oil Sands - Glossary". Oil Sands Royalty Guidelines. Government of Alberta. 2008. Archived from the original on 2007-11-01. பார்க்கப்பட்ட நாள் 2008-02-02.
↑Walker, Ian C. (1998), Marketing Challenges for Canadian Bitumen(PDF), Tulsa, OK: International Centre for Heavy Hydrocarbons, archived from the original(pdf) on 2012-03-13, பார்க்கப்பட்ட நாள் 2013-05-03, Bitumen has been defined by various sources as crude oil with a dynamic viscosity at reservoir conditions of more than 10,000 centipoise. Canadian "bitumen" supply is more loosely accepted as production from the Athabasca, Wabasca, Peace River and Cold Lake oil-sands deposits. The majority of the oil produced from these deposits has an API gravity of between 8° and 12° and a reservoir viscosity of over 10,000 centipoise although small volumes have higher API gravities and lower viscosities.