மத்திய தகவல் ஆணையம்

மத்திய தகவல் ஆணையம்
தலைமையிடம் ஆகஸ்ட் கிராந்தி பவன், புது தில்லி
நிறுவப்பட்ட ஆண்டு 2005
முக்கிய துறை தகவல் அறியும் சட்ட அமலாக்க நிறுவனம்
முதன்மை தகவல் ஆணையர் விமல் ஜூல்கா
இணையத் தளம் http://cic.gov.in/

மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission) இந்திய அரசால் அரசிதழ் அறிக்கை மூலம் அமைக்கப்பட்ட அரசமைப்பாகும். இதில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட முதன்மை தகவல் ஆணையரும் ஏனைய பத்து தகவல் ஆணையர்களும் பதவி வகிக்கின்றனர்.இந்த ஆணையத்தின் நோக்கம் குடிமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 கீழ் எந்த அரசு அமைப்பிடமிருந்தாவது தகவல் பெறுவதில் தடங்கல் இருந்தால் அதனைக் களைவது ஆகும். இந்த அமைப்பைப் போன்றே ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில ஆளுநரால் மாநில தகவல் முதன்மை ஆணையரும் பத்து மாநில தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.[1][2][3]

அதிகாரங்களும் பணிகளும்

மேற்கோள்கள்

  1. "Introduction". Central Information Commission. பார்க்கப்பட்ட நாள் 10 January 2018.
  2. "Annual Report for 2015–16" (PDF). Central Information Commission. p. 23. பார்க்கப்பட்ட நாள் 10 January 2018.
  3. "Introduction | Central Information Commission".
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த குடிமகனுக்காவது
  • தகவல் பெறும் வேண்டுகோளைக் கொடுப்பதில்,அது குறிப்பிட்ட அதிகாரியின் பணியிடம் காலியாக இருப்பதாலோ,யாரேனும் அதிகாரி வாங்க மறுப்பதனாலோ,அல்லது மேல்முறையீட்டை மேலதிகாரிக்கு அனுப்பாதிருப்பதாலோ, ஏற்படும் தடங்கல்கள் ஏற்பட்டால்;
  • இச்சட்டத்தின் கீழ் தகவல் பெறுவது மறுக்கப்பட்டால்;
  • கேட்கப்பட்ட தகவல் சட்டத்தில் குறிப்பிட்ட உரிய காலவரைக்குள் கொடுக்கப்படாவிடில்;
  • தகவல் பெற அளிக்கப்பட வேண்டிய கட்டணம் கூடுதலானது என மனுதாரர் கருதினால்;
  • மனுதாரர் தமக்கு அளிக்கப்பட்ட தகவல் முழுமையானது அல்லவென்றோ தவறானது என்றோ கருதினால்;
  • தகவல் பெற மனு கொடுப்பதிலோ பதில் பெறுவதிலோ எந்தவொரு விதயம் குறித்தும்;
எழும் புகார்களை ஆய்ந்து விடிவு காணுதல்
அவ்வாறு ஆய்ந்த புகார்களில் உண்மை இருக்குமானால் அவற்றைக் குறித்து துறைசார்ந்த ஆய்வு மேற்கொள்ளல்.
மத்திய/மாநில ஆணையம் இவ்வாறு ஆய்வு செய்யும்போது அவை குடிமையியல் நீதிமன்றத்திற்கு (civil court) உண்டான அதிகாரங்கள் கொண்டு கீழ்காணும் வகையில் செயல்படலாம்:-
  • யாரையும் அழைக்கவும் நேரில் வர கட்டாயப்படுத்தவும் அவர்களது வாய்மொழி அல்லது எழுத்துமூலமான சாட்சியத்தை பதிவு செய்யவும்,எந்த ஆவணத்தையும்,பொருளையும் வரவழைக்கவும் அதிகாரம்
  • வேண்டும் ஆவணத்தை தேடவும் பார்வையிடவும் ஆணையிடும் அதிகாரம்
  • உறுதிமொழியினை சாட்சியமாகக் ஏற்றுக்கொள்ளுதல்
  • எந்த நீதிமன்றத்திலிருந்தும் அலுவலகத்திலிருந்தும் பொது ஆவணங்களை பெற கோரல்
  • ஆவணங்களையும் சாட்சியங்களையும் சோதிக்க சம்மன் அனுப்பும் அதிகாரம்

இதனையும் காண்க

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!