பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் (இந்தியா)

இந்திய அரசின் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்பு1 ஆகத்து 1970; 54 ஆண்டுகள் முன்னர் (1970-08-01)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
அமைச்சர்
துணை அமைச்சர்
  • ஜிதேந்திர சிங், துணை அமைச்சர், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்
அமைப்பு தலைமைகள்
வலைத்தளம்persmin.nic.in

இந்திய அரசின் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் (Ministry of Personnel, Public Grievances and Pensions) இந்திய அரசிற்கான பணியாளர்களை தேர்வு செய்தல், பயிற்சி வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்தல் மற்றும் பொதுமக்கள் குறைகளை தீர்வு செய்தல் இதன் முக்கியப் பணியாகும். இந்த அமைச்சகம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. அவருக்கு உதவிட துணை அமைச்சராக ஜிதேந்திர சிங் உள்ளார். மேலும் இந்த அமைச்சகத்தின் பணிகளை மேற்பார்வையிட இரண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்ளனர்.

அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகள்

இந்த அமைச்சகத்தின் கீழ் மூன்று துறைகள் உள்ளது.[1] அவைகள்;

  • பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, (இந்திய அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி
  • நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்வுத் துறை
  • ஓய்வுதியங்கள் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை [1]

பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை

பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இந்திய அரசின் பணியாளர்கள் தேர்வு செய்தல் மற்றும் பயிற்சி வழங்குதல் ஆகும். மேலும் இத்துறை இந்திய ஆட்சிப் பணியாளர்களையும், இந்திய அரசின் மத்தியச் செயலக அதிகாரிகளையும் மேற்பார்வையிடுகிறது.[1][2][3]

அமைப்புகள்

பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள அமைப்புகள்:[3]

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற ஓய்வு கால நிதிப் பலன்கள் வழங்கவும் மற்றும் ஓய்வூதியர்களின் குறைகளை களையவும் இத்துறை செயல்படுகிறது. மேலும் ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற விதிகளை வகுக்கிறது.

நிர்வாகச் சீர்திருத்தம் & பொதுமக்கள் குறை தீர்வுத் துறை

  • அரசின் நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்தல்
  • பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து குறைகளை களைய, மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பை நிர்வகித்தல்
  • சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பரப்புதல்
  • குறியீட்டு மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்தல்
  • பல்வேறு அரசு அமைப்புகள் ஒருங்கிணைத்தல்

அரசு நிர்வாகத்தை மறுசீரமைத்தல், செயல்முறையை மேம்பாடுத்தல், அமைப்பு மற்றும் முறைகள் மற்றும் குறைகளைக் கையாளுதல் ஆகிய துறைகளில் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் அரசாங்கத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, மத்திய அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள்/ஒன்றியப் பகுதிகளின் நிர்வாகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் கலந்தாலோசிப்பது போன்ற பணிகாளில் இத்துறை ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறது. நவீனமயமாக்கல், குடிமக்கள் சாசனங்கள், விருதுத் திட்டங்கள், மின் ஆளுமை மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Laxmikanth, M. (2014). Governance in India (2nd ed.). Noida: McGraw-Hill Education (published 25 August 2014). pp. 7.36–7.37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9339204785.
  2. The Central Secretariat Service
  3. 3.0 3.1 "Organisation Under DOPT". Department of Personnel and Training, இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் March 7, 2018.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!