ஆசிய நேரக் கணக்குப்படி பசிபிக் போர் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கியது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நேரக் கணக்குப்படி 1941 டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்குகிறது.
பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு (ஆங்கிலம்: Japanese Occupation of British Borneo; மலாய்: Pendudukan Jepun di Borneo British) என்பது 1941 திசம்பர் 16-ஆம் தேதி முதல் 1945 ஆகத்து 15-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சப்பானிய இராணுவம் போர்னியோவை ஆக்கிரமிப்பு செய்ததைக் குறிப்பிடுவதாகும்.
1941 டிசம்பர் 16-ஆம் தேதி, சப்பானிய படைகள் பிரெஞ்சு இந்தோசீனாவில் (French Indochina) உள்ள கேம் ரன் விரிகுடாவில் (Cam Ranh Bay) இருந்து புறப்பட்டு சரவாக்கின்மிரி நகரில் தரையிறங்கின.
1941 சனவரி 1-ஆம் தேதி, சப்பானிய கடற்படை எதிர்ப்பு எதுவும் இல்லாமல் லபுவானில் தரையிறங்கியது.[4] அடுத்த நாள், 1941 சனவரி 2-ஆம் தேதி, வடக்கு போர்னியோ பிரதேசத்தில் உள்ள மெம்பக்குல் (Mempakul) என்ற இடத்தில் சப்பானியர்கள் தரையிறங்கினர்.
பொது
1941 சனவரி 8-ஆம் தேதி, செசல்டன் (Jesselton) எனும் இப்போதைய கோத்தா கினபாலு ஆக்கிரமிக்கப்பட்டது. அதற்கு முன்னர் அங்கு இருந்த செசல்டன் பிரித்தானிய அதிகாரிகளுடன் சரண் அடைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பிரித்தானிய போர்னியோ மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டது. சப்பானியர்கள் போர்னியோவில் இருந்த காலத்தில் அவர்களின் சப்பானிய மொழி மற்றும் சப்பானிய பழக்க வழக்கங்களை உள்ளூர் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என ஊக்குவித்தார்கள். அத்துடன் உள்ளூர் மக்களிடம் சப்பானிய மயமாக்கலைத் தீவிரமாக்கினார்கள்.
சப்பானியர்கள் வடக்கு போர்னியோவை ஐந்து மாநில நிர்வாகங்களாக (Shus) பிரித்து நிர்வாகம் செய்தார்கள். தவிர சில விமானநிலையங்களையும் அமைத்தனர். அதற்காகப் போர்க் கைதிகள் பலர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். இதன் விளைவாக பல போர்க் கைதி தடுப்பு முகாம்களும் திறக்கப்பட்டன.
நேச நாடுகளின் போர் வீரர்கள்
சப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த உள்ளூர் இயக்கங்களின் உறுப்பினர்கள்; நேச நாடுகளின் போர் வீரர்கள் மற்றும் காலனித்துவ அதிகாரிகள் பெரும்பாலோர் தடுத்து வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், உள்ளூர் மலாய்த் தலைவர்கள் பலர் சப்பானிய கண்காணிப்புடன் தலைமைப் பதவிகளில் தக்க வைக்கப் பட்டனர். மற்றும் பல வெளியூர்த் தொழிலாளர்கள் சப்பானியர்களின் புதிய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள்
1945-ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலமாக ஆத்திரேலியா அதிரடிப் படையினர் (Australian Commandos) போர்னியோ தீவிற்குள் மறைமுகமாகக் கொண்டு செல்லப் பட்டனர்.
நேச நாட்டு இசட் சிறப்புப் பிரிவு (Allied Z Special Unit) உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்துடன் ஆயிரக் கணக்கான பழங்குடி மக்கள் சப்பானியர்களுடன் கொரில்லா போரில் ஈடுபடுவதற்கு பயிற்சிகள் அளித்தனர்.
1945 செப்டம்பர் 12-ஆம் தேதி சப்பானியர்களிடம் இருந்து பிரித்தானிய இராணுவம் (British Military Administration of Borneo) முறைப்படி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
Braithwaite, Richard Wallace (2016). Fighting Monsters: An Intimate History of the Sandakan Tragedy. Australian Scholarly Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1-925333-76-3.