தேசிய நெடுஞ்சாலை 317அ (National Highway 317A (India)) பொதுவாக தே. நெ. 317அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின்மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 317-இன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[1][2] தேசிய நெடுஞ்சாலை 317அ என்பது பூட்டானுடன் இணைப்பை வழங்கும் மிக முக்கியமான சாலையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலை ஆசிய நெடுஞ்சாலை 48-இன் ஒரு பகுதியாகும்.[3]
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 317அ மேற்கு வங்காள மாநிலத்தில் பூட்டான் எல்லையில் உள்ள ஹசிமாரா, ஜெய்கானை இணைக்கிறது.[2][4]