தேசிய நெடுஞ்சாலை 317 (தே. நெ. 317)(National Highway 317 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்குகிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் கிளைச்சாலை பாதையாகும்.[2] இந்த பாதை முன்பு தேசிய நெடுஞ்சாலை 31இ-இன் ஒரு பகுதியாக இருந்தது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் பிர்பாரா முதல் ஹசிமாரா வரையிலான பகுதி ஆசிய நெடுஞ்சாலை 48-இன் ஒரு பகுதியாகும்.[3]
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 317 மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பிர்பாரா, மதாரி ஹாட், ஹசிமாரா, இராஜாபாத் காவா மற்றும் சல்சபாரி ஆகியவற்றை இணைக்கிறது.[4]