தேசிய நெடுஞ்சாலை 217 (National Highway 217 (India)) பொதுவாக தெ. நெ. 217 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் 51, 62-இன் ஒரு பகுதியாக இருந்தது. இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை-217 இந்தியாவின் அசாம்,மேகாலயா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
தே. நெ. 217 இந்தியாவின் அசாம், மேகாலயா மாநிலங்களில் உள்ள பைகான், துரா, தாலு, பாக்மாரா, ரோங்ஜெங், டாம்ரா, துத்னோய் நகரங்களை இணைக்கிறது.[3]