சான்ட்டியேகோ (Santiago) அல்லது சிலியின் சான்ட்டியேகோ (Santiago de Chile), சிலியின்தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும். பல அடுத்தடுத்த நகராட்சிகள் ஒன்றிணைந்து சான்ட்டியேகோ பெருநகரம்(Greater Santiago) என்றழைக்கப்படுகிறது. நாட்டின் மையப் பள்ளத்தாக்கில் கடல்மட்டத்திலிருந்து 520 m (1,706.04 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது தலைநகராக இருந்தபோதும் நாட்டின் சட்டமன்றங்கள் இங்கிருந்து மேற்கில் ஒருமணி நேரப் பயணத்தில் உள்ள கடற்கரை நகரான வால்பரைசோவில் கூடுகின்றன.
சிலியின் தொடர்ந்த பொருளியல் வளர்ச்சி சான்ட்டியேகோவை புறநகர் வளர்ச்சி, பல பல்பொருள்கடை வளாகங்கள், வியத்தகு உயர்ந்த கட்டிடங்கள் என இலத்தீன் அமெரிக்காவின் மிகுந்த நவீன மாநகரமாக மாற்றியுள்ளது. வளர்ந்துவரும் பாதாள தொடருந்து வலையமைப்பான சான்ட்டியேகோ மெட்ரோவுடன் நவீன பேருந்துச் சேவைகளையும் சுங்கத்துடன் கூடிய சுற்றுச்சாலைகள், உள்நகர நெடுஞ்சாலைகள் என மிகத்தற்காலிக போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
சான்ட்டியேகோ பல பன்னாட்டு நிறுவனங்களின் வலயத் தலைநகராகவும் நிதி நிறுவனங்களின் மையமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறுபட்ட பன்னாட்டுப் பண்பாடு தழைத்துள்ளது.
↑"Estadistica Climatologica Tomo I"(PDF) (in Spanish). Dirección General de Aeronáutica Civil. March 2001. pp. 404–427. பார்க்கப்பட்ட நாள் September 6, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)