கியோத்தோ (Kyoto, {{lang-ja|京都}) ஜப்பான் நாட்டின் ஹோன்ஷூ தீவின் நடுப்பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள்தொகை 1.5 மில்லியனுக்கும் அதிகமாகும். மேலும் கியோட்டோ மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது கி.பி 794 முதல் 1868 வரை பண்டைய ஜப்பானின் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது.[1] சப்பானின் பண்பாட்டு, கல்வி, தொழினுட்ப மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு சப்பானின் இரண்டாவது தொன்மையான தேசியப் பல்கலைக்கழகமான கியோத்தோ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.
வரலாறு
794 இற்குப் பிறகு சப்பானியப் பேரரசர்கள் ஹையன்-கியோ எனப்பட்ட இந்த நகரில் தான் வாழ்ந்துள்ளனர்.[2]
1868 இல் தெளிவிற்காக இந்த நகரம் சையிக்கியோ ("மேற்கத்திய தலைநகரம்") எனவும் தோக்கியோ எடொ ("கிழக்கத்திய தலைநகரம்") எனவும் அழைக்கப்பட்டன.[3]
புவியியல்
இந்த நகரத்தின் கிழக்கு, வடக்கு, மேற்குப் பக்கங்களில் மலைகள் சூழ்ந்துள்ளன. இந்த மலைகளால் கியோத்தோவின் வானிலை கோடைக்காலத்தில் வெப்பமாகவும் ஈரப்பதனுடனும் குளிர்காலத்தில் மிகுந்த குளிராகவும் இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.
கியோதோ சப்பானின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகும். இளவேனிலில் இங்கு மலரும் செர்ரிகளைக் காணவும் இலையுதிர்காலத்தில் மாறுகின்ற வண்ணக்கோலங்களைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். கியோத்தோ மரபுவழி உணவுகளில் காய்கள் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உலகின் மிக்தொன்மையான புனைகதையான சிகிபு முரசாக்கியின் கெஞ்சியின் கதை, ஹையன் கால கியோத்தோவில் நடப்பதாக அமைந்துள்ளது.