இலிமாய் (Lima) என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.