கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய் என்பது, நீரிழிவு நோய் இல்லாத பெண்கள் கருத்தரிப்புக்கு உட்பட்டிருக்கும் வேளையில், குறிப்பிட்ட கருத்தரிப்புக் காலத்தில், அவர்களின் குருதியில் உள்ள குருதிச் சர்க்கரையின் அளவு உயர்ந்து காணப்படும் ஒரு நிலையாகும்.[2] பொதுவாக கருத்தரிப்புக் காலத்தின் இறுதி மூன்று மாதங்களிலேயே இந்த நிலை ஏற்படும்[2]
இந்தக் கருத்தரிப்புக்கால நீரிழிவு நோயானது சில அறிகுறிகள் மற்றும் உணர்குறிகளைக் கொண்டிருக்கும். கருத்தரித்திருக்கும் பெண்களில் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல், மற்றும் கருத்தரிப்புக் காலத்தில் ஏற்படக்கூடிய மனத்தளர்ச்சி போன்ற நிலைகளைத் தோற்றுவிப்பதற்கான சூழிடரைக் கூட்டுவதுடன், குழந்தை பிறப்பின்போது, இயற்கை முறையில் குழந்தை வெளிவராமல், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியெடுக்க வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தலாம்.[2]
3 - 9 % கருத்தரிப்பில், இந்த கருத்தரிப்புக்க்கால் நீரிழிவு நோய் உருவாதல் அறியப்பட்டுள்ளது.[3] இதில் 1% மானோர் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 13% மானோர் 44 வயதுக்கு மேற்பட்டோராகவும் உள்ளனர்.[3] மேலும் ஆசிய மக்கள், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர், ஆத்திரேலியத் தொல்குடிகள், பசிபிக் தீவுகளைச் சேர்ந்த மக்கள் போன்றோர் இந்த கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய்க்கு சூழிடர் அதிகம் கொண்டவர்களாக இருப்பதும் அறியப்பட்டுள்ளது..[2][3] 90% மான பெண்களில் குழந்தை பிறப்பின் பின்னர், இந்த நோய் நிலை தானாகவே அகன்றுவிடும்.[2] ஆனாலும், அப்பெண்களில் பிற்காலத்தில் நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) உருவாவதற்கான சாத்தியம் கூடுதலாக இருக்கும்.[3]
காரணிகள்
போதியளவு இன்சுலின் இல்லாமை அல்லது இன்சுலினுக்கு எதிர்ப்புத் தன்மை ஏற்படுவதால் இன்சுலினுக்கான விளைவுகள் ஏற்படாமை போன்ற நிலைகள் இந்த கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளாக இருக்கின்றன.[2] அத்துடன் உடற் பருமன், முன்னரே கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய் இருந்திருத்தல், குடும்பத்தில் எவருக்கேனும் நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) இருந்திருத்தல், சூலகத்தில் நீர்மக்கட்டிகள் காணப்படல் (en:polycystic ovarian syndrome) போன்றன இந்நோய் உருவாவதற்கான சூழிடரைக் கொடுக்கின்றன.[2]
கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய் உருவாதல் பங்கெடுக்கும் மரபுசார் சூழிடர்கள்:[4]
இவற்றுடன் புகைத்தல் செயலும் சூழிடரைக் கொடுப்பதாக அறியப்படுகின்றது.[7] முரணான கருத்துக்கள் இருப்பினும் கட்டையான (en:Short stature பெண்களில் இந்த நோய்நிலைக்கான சூழிடர் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது[8]
கருத்தரிப்புக்கால நீரிழிவு நோயுள்ள 40-60% மான பெண்களில் குறிப்பிடத்தக்க சூழிடர் எதுவும் கண்டறியப்பட முடியாது இருப்பதனால், எல்லா கருத்தரித்த பெண்களிலும் குருதிச் பரிசோதனை செய்வது அறிவுறுத்தப்படுகின்றது.[9] சில பெண்களில் எந்த சூழிடர் அறிகுறிகளும் இருப்பதில்லை. சில கருத்தரித்த பெண்களில் அதிகரித்த தாகம், அதிகரித்த சிறுநீர் கழித்தல், அதிகரித்த களைப்பு, குமட்டல், வாந்தி, சிறுநீர்ப்பாதைத் தொற்று, சில மதுவ வகை நோய்த்தொற்று, மங்கிய பார்வை போன்ற அறிகுறிகள் மற்றும் உணர்குறிகள் காணப்படும்.
நோய் கண்டறிதல்
கருத்தரிப்புக்காலத்தில், குருதிப் பரிசோதனைகள் செய்து பார்த்தல் இந்நோயைக் கண்டறிந்து உடனடியாகத் தேவையான சிகிச்சை அளிக்க உதவும்[2] சாதாரண சூழிடர் உள்ள பெண்களில், பொதுவாக கருத்தரிப்புக் காலத்தின் 24 - 28 கிழமைகளில் இந்தச் சோதனை செய்யப்படும். அதிக சூழிடர் உள்ளவர்களாயின், கருப்பகாலத்தின் முதலாவது முன்பேறுகாலக் கவனிப்புக்காக மருத்துவரிடம் செல்லும் முதலாவது முறையிலேயே இந்தச் சோதனையைச் செய்வார்கள்.[2][3]
பின்விளைவுகள்
கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய்க்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உருவத்தில் மிகப் பெரியவையாகவோ, பிறந்த பின்னர் மிகக் குறைவான குருதிச் சர்க்கரை கொண்டவையாகவோ, மஞ்சள் காமாலை நோய் உடையவையாகவோ இருக்கலாம்.[2] கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை எதுவும் அளிக்கப்படாவிட்டால், பிறக்கும் குழந்தை இறந்து பிறக்கவும் சாத்தியம் ஏற்படும்.[2] நீண்ட கால விளைவை நோக்கினால், அவ்வாறான தாய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகள் பிந்திய காலங்களில், உடற் பருமன் கொண்டவையாக இருப்பதற்கும், அவர்களில் நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) நோய் உருவாகவும் சாத்தியம் ஏற்படும்.[2]
தடுப்பும், சிகிச்சையும்
தகுந்த உடற் பருமனைப் பேணல், கருத்தரிப்புக்கு முன்னர் உடற் பயிற்சிகள் செய்தல் போன்றன இந்த நோய் வராமல் தடுக்கும் முறைகளாகும்.[2] நீரிழிவு நோய்க்குரிய உணவு வகைகளை உண்ணல், உடற்பயிற்சி, இன்சுலின் ஊசி மூலம் ஏற்றல் போன்றன கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முறைகளாக உள்ளன.[2] அனேகமான பெண்கள் உணவு, மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் குருதியில் சக்கரை அளவை ஒரு மட்டுக்குள் வைத்திருப்பார்கள். பாதிப்பு உட்பட்டவர்கள், ஒரு நாளில் நான்கு தடவைகள் குருதிச் சோதனை செய்வார்கள்.[2][3] குழந்தை பிறந்த உடனேயே முலைப்பால் கொடுத்தல் பரிந்துரை செய்யப்படுகின்றது.[2]
↑Ross, G. (2006). "Gestational diabetes". Australian family physician35 (6): 392–396. பப்மெட்:16751853.
↑Toulis, K. A.; Goulis, D. G.; Kolibianakis, E. M.; Venetis, C. A.; Tarlatzis, B. C.; Papadimas, I. (2009). "Risk of gestational diabetes mellitus in women with polycystic ovary syndrome: A systematic review and a meta-analysis". Fertility and Sterility92 (2): 667–677. doi:10.1016/j.fertnstert.2008.06.045. பப்மெட்:18710713.
↑Bjorge, T.; Tretli, S.; Engeland, A.; Soule, L. M.; Schisterman, E. F.; Yu, K. F.; Catalano, P. M. (2004). "Relation of Height and Body Mass Index to Renal Cell Carcinoma in Two Million Norwegian Men and Women". American Journal of Epidemiology160 (12): 1168–1176. doi:10.1093/aje/kwh345. பப்மெட்:15583369.