அவுன்சு, அவுன்ஸ் அல்லது ஔன்சு (ஆங்கிலம் ounce, சுருக்கம் oz. தமிழில் அவு.) என்பது மெட்ரிக் முறையைச் சேராத ஒரு சிறிய எடை அலகு. ஒரு பவுண்டு நிறை (mass) எடையில் பதினாறில் ஒரு பங்கு. ஒரு அவுன்சு = 1/16 பவுண்டு. இவ் அலகு முன்னிருந்த பிரித்தானிய பேரரசிய (இம்ப்பீரியல்) முறையைச் சேர்ந்த ஓர் அலகு. தற்காலத்தில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. எடையைக் குறிக்கும் அவுன்சு என்னும் இதே பெயர் சிறு சிறு எடை வேறுபாடுகளுடன் பயன்பாட்டில் உள்ளது. பொதுவாக அவுன்சு என்று குறிக்க்ப்படுவது அனைத்துலக அவெடிபாய்சு (avoirdupois) அவுன்சு என்பதாகும். இது ஏறத்தாழ 28.35 கிராம் எடை உடையது. இது தவிர வேறு பல அவுன்சுகளில் டிராய் அவுன்சு (Troy ounce) என்பது 31.1 கிராம் எடை உள்ளது. டிராய் அவுன்சு என்பதை "டி அவு" என்னும் சுருக்கெழுத்துகளால் குறிக்கப்பெறும்.
பல்வேறு அவுன்சுகள்
அவுன்சு அளவுகளும் ஈடான எடைகளும்
வெவ்வேறு அவுன்சுகள்
|
கிராம் அளவில் நிறை அல்லது எடை
|
கிரெயின் அல்லது "அரிசி" அளவில் எடை
|
அனைத்துலக அவெடிபாய்சு அவுன்சு International avoirdupois ounce
|
28.3495231
|
437.5
|
அனைத்துலக டிராய் அவுன்சு
|
31.1034768
|
480
|
அப்போத்தெக்காரிகள் அவுன்சு Apothecaries' ounce
|
மரியா தெரெசா அவுன்சு Maria Theresa ounce
|
28.0668
|
433.137
|
டச்சு மெட்ரிக் அவுன்சு
|
100
|
1,543.236
|
சீனா மெட்ரிக் அவுன்சு
|
50
|
771.618
|
குறிப்பு: மரியா தெரெசா, டச்சு சின்னா ஆகிய அவுன்சுகளில் காட்டப்பட்டுள்ள கிரெயின் அல்லது "அரிசி" அளவு ஓர் அரிசியின் ஆயிரத்தில் ஒரு பங்கின் அளவுத் துல்லியத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.
|
குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்