ஸ்சயின் (Shine) ஒரு ஒரு ராப் இசைக் குழுவாகும். இந்தக் குழு சுதாஸ், சகயா, சுபீஸ் ஆகிய மூன்று சகோதரகளைக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களான இவர்களின் பாடல்கள் ஈழத்து நிலைமைகளை எடுத்துரைக்கிறன. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பல பாடல்கள் அமைந்தாலும் இவர்களின் முதல் தமிழ் ஆங்கில ராப் பாடலான உலகம் முடியும் வரை, உயர்கள் அழியும் வரை [1] மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் சுஜதா இந்தப் பாடலே தனக்கு மெத்த பிடித்த தமிழ் ராப் பாடல் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் நோர்வேயில் இயங்குகிறார்கள்.