சொற்களை இராகத்துடன் கோவையாக விரைவாக தொடராகப் பாடுவதை ராப் இசை எனலாம். ராப் இசை வடிவம் அமெரிக்காவில் 1970 களில் கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாகத் துவங்கி உலக பொதுப் பாட்டின் ஒர் உறுப்பாகிவிட்டது. அமெரிக்க கறுப்பின மக்களின் பண்பாட்டு சூழமைவில் தோன்றியதால், ராப் இசை வடிவமும் அதன் பிரதிகளும் அந்த மக்களின் பின்புலத்தையும் உள்வாங்கியே பிரதிபலிக்கின்றன. தமிழ் ராப் இசை அமெரிக்க ராப் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம். தமிழில் ராப் இசையை சொல்லிசை என்றும் குறிப்பிடுவர். தமிழில் அடுக்குமொழித் தொடர்கள் ராப் பாடல்களில் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
தமிழ் இலக்கியத்தில் சொல்லிசைச் சிறப்பு
கலிங்கத்துப் பரணி
எடும்எடும் எடும்என எடுத்தோர்
இகல்வலி கடல்ஒலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடும் எனஒலி மிகைக்கவே
விளைகனல் விழிகளின் முளைக்கவே
மினல்ஒளி கனலிடை பிறக்கவே
வளைசிலை உரும்என இடிக்கவே
வடிகனை நெடுமழை சிறக்கவே
12_கலிங்கத்துப்_பரணி_போர்_பாடியது பரணிடப்பட்டது 2010-01-03 at the வந்தவழி இயந்திரம்
அருணகிரிநாதரின் கந்தரநுபூதி
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பாடல்கள்
- உலகம் முடியும் வரை - [1], [2]
- சிலுவை நாதர் - [3]
- உறவாய் - [4]
- யே ரவுன் - [5]
- ஆய்யுபவன் வணக்கம் - [6]
- சமதானம் உனக்கும் எனக்கும் தேவை - [7]
- இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் - Yogi-B and Natchatra - [8]
- நம்மூரை மறந்து போய், பட்டணம் ஓடிப் போனா" - Gajan&Dinesh - [9]
- கோடி கேள்வியின் பதில் Chakrasonic - Kodi Kelviyin Bathil (Malaysian Artist) [10][11][12]
- ஆடு புலி ஆட்டம் [13]
- நல்லவர் சொல்லை [14]
- இது ஒரு புதுப் படைப்பு - அஸ்திவாரம் [15]
- திருத்தமா முடியுமா சொல் - [16]
- ஈழத்து காற்று - [17]
- அடிமேல் அடிபட்டு - [18]
- கோழை - [19]
- பொய் - [20]
- யார்க்கும் குடியெல்லோம் - [21]
- வாழ்வும் வரும், சாவும் வரும் - [22]
- இது கதை இல்லை நிஜம் - [23]
- பொறாமை - [24]
- பெரியார் - [25]
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
தமிழ் ராப் இசைக் குழுக்கள்/கலைஞர்கள்