துள்ளிசை என்பது குறிப்பாக உணர்வுமேலிட்ட இசை அல்லது இசைப்பதிவாகும். இதனை குத்துப்பாட்டிசை என்றும் கூறுவர்.
இவ்வகை இசையினைக் கேட்பவர்கள் தங்களை அறியாமலேயே தமது உடலையும் மனதையும் இசைக்கேற்ப ஒன்றித்துவிடுவர்.
மேற்கத்திய இசை முறைப்படி 2/4 அல்லது 6/8 தாள வகையில் அடங்கிய பாடலுக்கு இளம் வயதினர் தங்கள் கால்களால் ஆட்டம் போட்டபடியும் கைகளால் தாளம் தட்டியபடியும் ஒன்றிவிடுவது இயற்கை.[சான்று தேவை]