உரையினை காண்க
விவேரா (Viverra) என்பது ஒரு பாலூட்டி பேரினமாகும். விவேராவை கரோலஸ் லின்னேயஸ் 1758-ல் முதன்முதலில் பேரினமாகப் பரிந்துரைத்து விவரித்தார். இது இந்தியப் பெரிய புனுகுப்பூனை (வி. சிப்பெதா) உள்ளிட்ட பல சிற்றினங்களை உள்ளடக்கியது. இந்தப் பேரினம் விவிரிடே குடும்பத்தில் ஜான் எட்வர்ட் கிரே என்பவரால் 1821 துணைநிலையில் வைக்கப்பட்டது.[2]
விவேரா சிற்றினங்கள் மற்ற பேரினங்களிலிருந்து முன்னங்கால் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகின்றன. இந்த சிற்றினங்களின் முன்னங்காலின் மூன்றாவது மற்றும் நான்காவது கால் இலக்கங்கள் உள்ளிழுக்காமல் பாதுகாப்காக உறையின் மூலம் செயல்படுகிறது. கால் பட்டை முடியால் சூழப்பட்டுள்ளன. மேலும் நீண்ட மற்றும் குறுகிய தலையோட்டுடன் குறுகிய, கிட்டத்தட்ட இணையான, சுருங்கிய இடுப்புடன் காணப்படும்.
{{cite web}}