வனேடியம்(III) புளோரைடு(Vanadium(III) fluoride) என்பது VF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் உள்ள இவ்வெப்பந்தாங்கும் பொருளை MnF2 போன்ற நிலைமாற்ற உலோக புளோரைடுகள் தயாரிப்பது போல V2O3 சேர்மத்தில் இருந்து இரண்டு படிநிலைகளில் தயாரிக்க முடியும்[4]. குறைந்த வெப்பநிலையில் இச்சேர்மம் காந்த ஒழுங்குகளை வெளிப்படுத்துகிறது. உதாரணம்: V2F6.4H2O நீரேற்று வடிவம் 12 கெல்வின் வெப்பநிலையில் காந்த ஒழுங்குகளை வெளிப்படுத்துகிறது.[5]).
கனிமவேதியியல் திண்மங்களைத் தயாரிப்பதற்கு அமோனியம் உப்புகள் வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவது பொதுவான முறையாகும்.
வனேடியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் புளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் VF3 சேர்மத்தைத் தயாரிக்க இயலும். புளோரின் அணுக்களுடன் பாலம் அமைத்திருக்கும் ஆறு ஒருங்கிணைவு வனேடியம் அணுக்கள் கொண்ட VF3 ஒரு படிகத் திண்மமாகும். இச்சேர்மத்தில் இரண்டு பண்பிரட்டையாகா எலக்ட்ரான்கள் இருப்பதை காந்தத் திருப்புத்திறன் வெளிப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
↑ 1.01.11.21.31.41.5Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.