வனேடியம்(II) சல்பேட்டு

வனேடியம்(II) சல்பேட்டு
இனங்காட்டிகள்
13566-06-8 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166848 நீரிலி
22613976 எழுநீரேற்று
  • [O-]S(=O)(=O)[O-].[V+2]
UNII IO5B4EXJYI Y
பண்புகள்
H12O10SV
வாய்ப்பாட்டு எடை 255.09 g·mol−1
தோற்றம் ஊதா நிறத் திண்மம்
அடர்த்தி 1.910 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வனேடியம்(II) சல்பேட்டு (Vanadium(II) sulfate) என்பது VSO4(H2O)x என்ற பொது மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மங்களை குறிக்கும். வாய்பாட்டில் உள்ள x இன் மதிப்பு 0 ≤ x ≤ 7 என்று மாறுபடும். பொதுவாக அறுநீரேற்று இயற்கையில் காணப்படுகிறது. ஊதா நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரைந்து நீரயணி அணைவு காற்று உணர்திறன் கரைசல்களைக் கொடுக்கிறது. [Mg(H2O)6]SO4 சேர்மத்துடன் இது சமவுருவத்துடன் காணப்படுகிறது. [V(H2O)6]3+ அயனியிலுள்ள V-O பிணைப்பின் பிணைப்பு நீளம் 191 பைக்கோமீட்டருடன் ஒப்பிடும்போது, V-O தூரம் [V(H2O)6]SO4 சேர்மத்தில் உள்ள V-O பிணைப்பின் பிணைப்பு நீளம் 212 பைக்கோமீட்டர் ஆகும். ஏறக்குறைய 10% நீளமானது குறைந்த மின்னூட்டத்தின் விளைவைப் பிரதிபலிக்கிறது. மின்னியல் ஈர்ப்பும் பலவீனமடைகிறது.[1]

வனேடியம்(II) சல்பேட்டின் எழுநீரேற்றும் படிகமாக்கப்பட்டுள்ளது. கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட வனேடைல் சல்பேட்டை மின்னாற்பகுப்பு ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் இந்த எழுநீரேற்று உருவாகிறது.[2] படிகங்களில் கூடுதலான நீர் படிகங்களுடன் [V(H2O)6]2+ மையங்கள் காணப்படுகின்றன. பெரசு சல்பேட்டு எழுநீரேற்றை ஒத்த சேர்மமாக வனேடியம்(II) சல்பேட்டின் எழுநீரேற்று திகழ்கிறது..[3] வனேடசு அம்மோனியம் சல்பேட்டு ((NH4)2V(SO4)2·6H2O)) இதனுடன் தொடர்புடைய சேர்மமாக உள்ளது. தட்டனின் உப்பு என அறியப்படும் இவ்வுப்பு பெரசு அம்மோனியம் சல்பேட்டை ஒத்ததாக உள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. F. Albert Cotton; Larry R. Falvello; Llusar, R.; Libby, E.; Murillo, C. A.; Schwotzer, W. (1986). "Synthesis and Characterization of Four Vanadium(II) Compounds, Including Vanadium(II) Sulfate Hexahydrate and Vanadium(II) Saccharinates". Inorganic Chemistry 25 (19): 3423–3428. doi:10.1021/ic00239a021. 
  2. Kranz, M. (1963). "Vanadium(II) Sulfate". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 7. pp. 94–96. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132388.ch29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13238-8.
  3. Cotton, F. A.; Larry R. Falvello; Murillo, C. A.; Pascual, I.; Schultz, A. J.; Tomas, M. (1994). "Neutron and X-Ray Structural Characterization of the Hexaaquavanadium(II) Compound V(SO4)·7H2O". Inorganic Chemistry 33 (24): 5391–5395. doi:10.1021/ic00102a009. 
  4. Montgomery, H.; Morosin, B.; Natt, J. J.; Witkowska, A. M.; Lingafelter, E. C. (1967). "The crystal structure of Tutton's salts. VI. Vanadium(II), iron(II) and cobalt(II) ammonium sulfate hexahydrates". Acta Crystallographica 22 (6): 775–780. doi:10.1107/S0365110X67001550. Bibcode: 1967AcCry..22..775M. 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!