தூலியம்(III) புரோமைடு(Thulium(III) bromide) என்பது TmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இச்சேர்மம் தூலியம் டிரைபுரோமைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு தூலியம் அணு மற்றும் மூன்று புரோமின் அணுக்கள் சேர்ந்து தூலியம்(III) புரோமைடு உருவாகிறது. அறை வெப்பநிலையில் இது வெண்மை நிறத் தூளாகக் காணப்படுகிறது. தூலியம்(III) புரோமைடு நீருறிஞ்சும் தன்மை கொண்டது ஆகும்.தூலியம்(III) புரோமைடு 952 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது[4].
பயன்கள்
இலந்தனம் புரோமைடு அலுமினியம் புரோமைடுடன் சேர்ந்து கலவையாகும் வினையில் தூலியம்(III) புரோமைடு வினைப்பொருளாகப் பயன்படுகிறது. கார தூலியம் புரோமைடு தயாரித்தலில் வினைபடு பொருளாகவும் இது பயன்படுகிறது [1]. பாதரசமற்ற இறக்க விளக்குகளிலும் தூலியம்(III) புரோமைடு பயன்படுத்தப்படுகிறது [5].