துத்தநாக புரோமைடு (Zinc bromide) என்பது ZnBr2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். துத்தநாக குளோரைடு போன்றே நிறமற்ற இவ்வுப்பும் கரிம கரைப்பான்கள் மற்றும் தண்ணீரில் நன்கு கரைந்து அமிலக் கரைசல்களை உருவாக்குகிறது. நீரை உறிஞ்சும் தன்மை கொண்டிருப்பதால் இவ்வுப்பு ZnBr2 · 2H2O என்ற ஈரைதரேட்டுகளையும் உருவாக்குகிறது.
நீரற்ற துத்தநாக புரோமைடு தயாரிக்க வேண்டுமெனில் ஈரைட்ரைடை சூடான கார்பன் ஈராக்சைடு வாயுவுடன் சேர்த்து நீர்நீக்கியோ அல்லது நேரடியாக துத்தநாக உலோகத்தை புரோமினுடன் சேர்த்தோ தயாரித்துக் கொள்ளலாம்[3].
அமைப்பு
படிக துத்தநாக புரோமைடின் மூலக்கூறு அமைப்பு துத்தநாக அயோடைடின் அமைப்பை அப்படியே ஒத்திருக்கிறது. நான்கு நான்முக துத்தநாக மையங்கள் நான்முக வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இணைந்த நான்கு நான்முகிகளும் தங்களுக்குள் மூன்று முனைகளை பங்கீடு செய்து கொண்டு பெயரளவிலான சிறப்பு நான்முக அமைப்பை ஏற்படுத்துகின்றன {Zn4Br10}2-. அவை தங்கள் முனைகள் மூலம் இணைந்து முப்பரிமான வடிவத்தைப் பெறுகின்றன[4]. ஈரைட்ரைடு ZnBr2 • 2H2O வழக்கமான மூலக்கூறு அமைப்பையே கொண்டு Zn(H2O)6 Zn2Br6 வகையிலானது என்று விவரிக்கப்படுகிறது. இங்குள்ள Zn2Br62− அயனிகள் இரண்டு துத்தநாக அணுக்களை இணைத்து இணைப்புப் பாலமாக கருதப்படுகின்றன. இதைப்போன்றதொரு மூலக்கூறு அமைப்பு அலுமினியம் புரோமைடின் இருபடிமான வடிவத்தில் அறியப்பட்டுள்ளது (Al2Br6)[5]
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளில் துத்தநாக புரோமைடு கலந்த கரைசல்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிணறுகளில் தோண்டப்பட்ட மண்ணை தோண்டப்பட்ட இடத்திலிருந்து நிறைவுபெற்ற பகுதிக்கு மாறும் நடவடிக்கைகளில் இக்கரைசல்கள் பயன்படுகின்றன. மிகவும் அடர்ந்த இவ்வுப்புக் கரைசல் கொடுக்கும் 20 பவுண்டுகள்/கேலன் எடை, உயர் அழுத்த கிணறுகளில் உள்ள எரியக்கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு துகள்களை வெளிக் கொண்டுவருவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனினும், இதனுடைய அதிக அமிலத்தன்மை காரணமாக அரிப்பு மற்றும் கையாளுதல் பிரச்சினைகள் தோன்றுகின்றன. மேலும் இதனுடைய நீர் அகற்றும் பண்பின் காரணமாக அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான மேலாடைகள் மற்றும் ரப்பர் காலணிகள் அணியவேண்டியும் உள்ளது[7].
துத்தநாக புரோமைடு கரைசல்களை கதிர்வீச்சுக்கு எதிரான ஒளிபுகு கேடயமாக பயன்படுத்த இயலும். இணைக்கப்பட்ட இரண்டு கண்ணாடித் தகடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் அதிக அடர்த்தியுள்ள துத்தநாக புரோமைடு நீர்க்கரைசல் கதிவீச்சுச் சாளர கேடையமாக உதவுகிறது. இது காரீய கண்ணாடிச் சாளரத்தைவிட பாதுகாப்பானதாகவும் உள்ளது. இந்த துத்தநாக புரோமைடு உப்பு கரைசல் பயன்படுத்துவதன் மூலமாக கதிரியக்க சேதத்தை குறைக்கவும் எளிதாக பழுதுநீக்கம் மேற்கொள்ளவும் இயல்கிறது[8].
முன் பாதுகாப்பு
துத்தநாக குளோரைடுக்கு பின்பற்றப்பட்ட முன்பாதுகாப்பு நடவடிக்கைகளே துத்தநாக புரோமைடிற்கும் பொருந்தும். இதனுடைய மனித நச்சுத்தன்மை அளவு 3 முதல் 5 கிராம் ஆகும் [3]
↑ 3.03.13.2Rohe, D. M.; Wolf, H. U. (2005). "Zinc Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a28_537.
↑Chieh, C.; White, M. A. (1984). "Crystal structure of anhydrous zinc bromide". Zeitschrift für Kristallographie166 (3-4): 189–197. doi:10.1524/zkri.1984.166.3-4.189.
↑Duhlev, R.; Brown, I. D.; Faggiani, R. (1988). "Zinc bromide dihydrate ZnBr2 · 2H2O: a double-salt structure". Acta Crystallografica C44 (10): 1696–1698. doi:10.1107/S0108270188006584.