மேற்கு மிட்னாபூர் மாவட்டம் (West Midnapore district or Paschim Medinipur district) (Pron: pɔʃʧɪm med̪iːniːpur) (Pron: ˌmɪdnəˈpʊə) (வங்காள மொழி: পশ্চিম মেদিনীপুর জেলা),இந்தியாவின்மேற்கு வங்காளம்மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். வர்தமான் கோட்டத்தில் அமைந்த 9 மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் மிட்னாபூர் நகரமாகும். மிட்னாபூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக 1 சனவரி 2002-இல் இரண்டாக பிரிக்கும் போது மேற்கு மிட்னாபூர் மாவட்டம் உருவானது.
9,368 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கரக்பூர், மிட்னாபூர் சதர், காட்தல் மற்றும் ஜார்கிராம் என நான்கு உட்கோட்டங்களை கொண்டது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்படும் இந்திய மாவட்டங்களில் ஒன்றாக மேற்கு மிட்னாபூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.[1]
மாவட்டப் பிரிவினை
4 ஏப்ரல் 2017 அன்று இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதியான ஜார்கிராம் உட்கோட்டத்தைப் பிரித்து ஜார்கிராம் மாவட்டம் நிறுவப்பட்டது.
வேளாண்மை பொருளாதாரத்தை மட்டுமே நம்பியுள்ள இம்மாவட்டம்,
மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக மேற்கு மிட்னாபூர் மாவட்டம் உள்ளது என இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம அறிவித்துள்ளது. பின் தங்கிய பகுதிகளுக்க்கான நிதியுதவி வழங்கும் திட்டப்படி, இம்மாவட்டம் இந்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறும், பதினொன்று மேற்கு வங்காள மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது.
[2]
மாவட்ட நிர்வாகம்
வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கரக்பூர், மிட்னாபூர் சதர் மற்றும் காட்தல் என மூன்று உட்கோட்டங்கள் கொண்டது.
கரக்பூர் உட்கோட்டத்தில், கரக்பூர் நகராட்சி மன்றம் மற்றும் டாண்டன்; I, டாண்டன்; II, பிங்களா, கரக்பூர்; I, சபாங், மோகன்பூர், நாராயணன்கஞ்ச், கேஷியாரி மற்றும் தேப்ரா என பத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இயங்குகிறது.
மிட்னாபூர் உட்கோட்டத்தில் மிட்னாபூர் நகராட்சி மற்றும் மிட்னாபூர் சதர், கார்பேட்டா;I, கார்பேட்டா;II, கார்பேட்டா;III, கேஷ்பூர் மற்றும் ஷால்போனி என ஆறு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இயங்குகிறது.
காட்தல் உட்கோட்டத்தில் இராம்ஜிபான்பூர் நகராட்சி, சந்திரகோனா நகராட்சி, கிர்பாய் நகராட்சி, காரார் நகராட்சி மற்றும் காட்தல் நகராட்சி என ஐந்து நகராட்சி மன்றங்களையும் சந்திரகோனா;I,, சந்திரகோனா;II தாஸ்பூர்;I, தாஸ்பூர்;II, காட்தல் என ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களையும் கொண்டுள்ளது.
மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் மிட்னாபூர், கரக்பூர், ஜார்கிராம், காட்தல், பேல்தா, சந்திரகோனா, கார்பேட்டா, பாலிசாக், தாண்டன், மோகன்பூர், கோபிவல்லபுரம், நயாகிராம், கெஷியாரி, கேஷ்பூர், நாராயணன்கஞ்ச், சபாங் மற்றும் தாஸ்பூர் நகரங்களைக் கொண்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,913,457 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3,007,885 மற்றும் பெண்கள் 2,905,572 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 966 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 631 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 78.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.26 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 685,012 ஆக உள்ளது.[5]
சமயம்
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 5,056,953 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 620,554 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 23,287 ஆகவும், பிற சமயத்தவர்களின் மக்கள்தொகை கணிசமாக உள்ளது.
அரசியல்
மக்களவைத் தொகுதிகள்
இம்மாவட்டத்தில் மிட்னாபூர் மக்களவை தொகுதி, காட்தல் மக்களவை தொகுதி, ஜார்கிராம் மக்களவை தொகுதி (பழங்குடி மக்கள் (ST)), ஆரம்பாக் மக்களவை தொகுதி, (பகுதி) என நான்கு மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மாவட்டத்தில் டாண்டன் சட்டமன்ற தொகுதி, நயாகிராம் சட்டமன்ற தொகுதி, கோபிவல்லபபுரம் சட்டமன்ற தொகுதி, ஜார்கிராம் சட்டமன்ற தொகுதி, கேசியாரி சட்டமன்ற தொகுதி, கரக்பூர் சதர் சட்டமன்ற தொகுதி, நாரயண்கர் சட்டமன்ற தொகுதி, சபங் சட்டமன்ற தொகுதி, பிங்களா சட்டமன்ற தொகுதி, கரக்பூர் சட்டமன்ற தொகுதி, தேப்ரா சட்டமன்ற தொகுதி, தாஸ்பூர் சட்டமன்ற தொகுதி, காட்தல் சட்டமன்ற தொகுதி, சந்திரகோனா சட்டமன்ற தொகுதி, கார்பேடா சட்டமன்ற தொகுதி, சல்போனி சட்டமன்ற தொகுதி, கேஷ்பூர் சட்டமன்ற தொகுதி, மிட்னாபூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பின்பூர் சட்டமன்ற தொகுதி என பதிநான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.