பட்னா மக்களவைத் தொகுதி (Patna Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பீகாரில் 1957 முதல் 2008 வரை நடைமுறையிலிருந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும். பின்னர் 2008ஆம் ஆண்டில் இது பாடலிபுத்ரா மற்றும் பட்னா சாகிப் என இரண்டு தொகுதிகளாக மறுவறை செய்யப்பட்டது.
விளக்கம்
முதல் மக்களவை காலத்தில் பட்னா பிராந்தியத்தில் பாடலிபுத்ரா, பட்னா மத்தி, பட்னா கிழக்கு மற்றும் பட்னா-சாகாபாத் (அர்ராஹ்) என 4 மக்களவைத் தொகுதிகள் இருந்தன.
1957ஆம் ஆண்டில் 2ஆவது மக்களவையின் போது, அனைத்து தொகுதிகளும் பின்வருமாறு மறுபெயரிடப்பட்டன.
1991 ஆண்டு பாட்னாவில் நடந்த மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மோசடி குறித்த அறிக்கைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஜனதா தளம் இந்தர் குமார் குஜ்ராலையும் ஜனதா கட்சியஷ்வந்த் சின்காவினை வேட்பாளராக நிறுத்தியது.