ஜான் குரோம்வெல் மேத்தர் (பி. ஆகஸ்ட் 7, 1946) அவர்கள் ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் பரிசை பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜியார்ஜ் ஸ்மூட் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். ஜான் மேட்த்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இருக்கும் நாசா (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) அறிவியல் அறிஞராக பணியாற்றி வருகின்றார். மேத்தர் அவர்களும் ஸ்மூட் அவர்களும் கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி)
(Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக நோபல் பரிசு அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது.
இவர், ஆதி முதல் ஒளி: பேரண்டத்தோற்றத்தின் அதிகாலை (வைகறை)ப் பொழுத்துக்கு பின்னோக்கிப் பயணம்(செலவு) செல்லும் அறிவியல் உண்மைக் கதை (The Very First Light: The True Inside Story of the Scientific Journey Back to the Dawn of the Universe,) என்னும் நூலை ஜான் போஸ்லோ (John Boslough) என்பாருடன் சேர்ந்தெழுதி 1996ல் வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
கல்வியும் துவக்க ஆய்வுகளும்
பள்ளிப்படிப்பு: நியூ ஜெர்சியில் உள்ள நியூட்டன் என்னும் ஊரில் உள்ள நியூ ஜெர்சி உயர்நிலைப்பள்ளியில் (Newton High School, Newton, New Jersey) 1964ல் தேர்ச்சி பெற்ரார்.