குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Guangzhou Baiyun International Airport, (ஐஏடிஏ: CAN, ஐசிஏஓ: ZGGG)) சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் தலைநகர் குவாங்சோவின் முதன்மை வானூர்தி நிலையமாகும். இதன் இரண்டு நிலையக் குறியீடுகளும் முன்பிருந்த பழைய வானூர்தி நிலையத்தினுடையதாகும். இரண்டும் உரோமானியப் பெயரான கன்டன் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்த வானூர்தி நிலையம் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு முனைய நடுவமாக விளங்குகிறது.
2011ஆம் ஆண்டுத் தரவுகளின்படி குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் சீனாவின் இரண்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாகவும் உலகின் 19வது போக்குவரத்து மிகுந்த நிலையமாகவும் விளங்குகிறது; இங்கு பயணித்தவர்களின் எண்ணிக்கை 45,040,340 ஆக இருந்தது. சரக்குப் போக்குவரத்தில் இந்த வானூர்தி நிலையம் சீனாவில் மூன்றாவதாகவும் உலகில் 21வதாகவும் உள்ளது. இயக்கப்படும் வானூர்திகளில் இது சீனாவில் இரண்டாமிடத்தில் உள்ளது.