இந்த நிறுவனத்தின் சின்னமான கலைமயமான பீனிக்சு வடிவத்தை முன்னாள் தேசியத் தலைவரான டங் சியாவுபிங் உருவாக்கினார். மேலும் பீனிக்சு சின்னம் “VIP” என்பதன் கலைமயமான பெயர்ப்பாக அமைந்துள்ளது. ஏர் சீனா ஸ்டார் அல்லையன்சின் உறுப்பினராகும்.
2010இல் ஏர் சீனா 60 மில்லியன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதன் நிகர இலாபமாக 12 பில்லியன் யுவான் (USD $1.83 பில்லியன்) ஆக இருந்தது.[1]
2006ஆம் ஆண்டில் திசம்பர் 10 முதல் தென் அமெரிக்க சேருமிடங்களுக்கும் சேவை வழங்கத் தொடங்கி உள்ளது. மத்ரித் வழியாக குவாருலோசு பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு ஏர் சீனா இயக்கும் வான்வழித் தடமே இந்த நிறுவனம் இயக்கும் மிக நீண்ட நேரடி சேவை ஆகும்.