எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம் (Twenty-ninth Dynasty of Egypt or Dynasty XXIX, alternatively 29th Dynasty or Dynasty 29) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காவது வம்சம் ஆகும். இது எகிப்திய மக்களின் வம்சமாகும். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் கீழ் எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் உள்ள மென்டிஸ் நகரம் ஆகும். இவர்கள் கிமு 398 முதல் கிமு 380 முடிய 18 ஆண்டுகளே கீழ் எகிப்தை மட்டும் ஆண்டனர்.
கிமு 398-இல் இருபத்தி எட்டாம் வம்சத்தவர்களை வென்ற 28-ஆம் வம்ச பார்வோன் முதலாம் நெபாருத் என்பவர் இந்த 29-ஆம் வம்ச ஆட்சியை நிறுவினார். நெபாருத்தின் இறப்பிற்குப் பின்னர் அரியணைப் போட்டி நிலவியது. இருப்பினும் ஹாக்கோர் எனும் பார்வோன் அரியணை ஏறினார்.