விண்டோஸ் 2.0

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2.0
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
மூலநிரல்மூடிய மூலம்
உற்பத்தி வெளியீடுநவம்பர் 1987
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
2.03 / நவம்பர் 1987[1]
கருனி வகைN/A
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
ஆதரவு நிலைப்பாடு
31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 2.0 விண்டோஸ் 1.0 இன் வழிவந்த வரைகலைச் சூழலுடன் கூடிய 16 பிட் இயங்குதளம் ஆகும்.

புதிய வசதிகள்

பக்கத்தில் பக்கத்தில் மாத்திரமே வைத்திருந்த விண்டோஸைப் போன்றல்லாது ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கும் விண்டோஸ்களை இந்த இயங்குதளம் அறிமுகம் செய்தது. விசைப்பலகையூடான குறுக்கு வழிகளையும் அறிமுகம் செய்தது. விண்டோஸ் 1.0 இல் பாவித்த தொழில் நுட்பச் சொற்களான "ஐகானைஸ்", "சூம்" போன்ற சொற்களை விடுத்து "சிறிதாக்கு" "பெரிதாக்கு" பொன்ற சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

பிரயோகங்களின் ஆதரவு

முதன் முறையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2.0 இல் மைக்ரோசாப்ட் வேர்டு மற்றும் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் இயங்கும் வண்ணம் செய்யப்பட்டது. மைக்ரோசாப்ட் அல்லாதா மென்பொருள் விருத்தியாளர்கள் இந்தப் பதிப்பில் ஆதரவைக் கூட்டிக் கொண்டனர். சிலர் விண்டோஸை முழுமையாக வாங்கிக் கொள்ளாத பயனர்களுக்காக விண்டோஸ் இயங்குநிலை மென்பொருட்களையும் உள்ளடக்கியிருந்தனர். எனினும் பெரும்பாலான மென்பொருள் விருத்தியாளர்கள் விண்டோஸ் இயங்குதளத்தினைப் பாவிப்பவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்ததினால் டாஸ் இயங்குதளத்திற்கென்றே மென்பொருளை உருவாக்கினர்.

ஆப்பிள் கணினியுடனான சட்ட முரண்பாடுகள்

17 மே 1988 ஆப்பிள் கணினி நிறுவனத்தினர் தமது ஆப்பிள் மாக்கிண்டோஷ் இயங்குதளத்தில் இருப்பதை போலவே பார்த்தவுடனும் வேலைசெய்யும் பொழுதும் பணிபுரியக்கூடியதாக இந்த விண்டோஸ் இயங்குதளத்தை திருட்டுத்தனமாக உருவாக்கியதாக மைக்ரோசாப்ட் மற்றும் ஹூயுல்லெட் பக்காட் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. முழுமையாகப் பார்க்கும் பொழுது ஆப்பிள் மாக்கிண்டோஷ் இயங்குதளம் போன்றே தோற்றமளித்தது.

மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
  1. http://support.microsoft.com/kb/32905

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!