எம்எஸ்-டொஸ் அல்லது எம்எஸ்-டாஸ் (MS-DOS, EM-es-DOSS-'; Microsoft Disk Operating System - மைக்ரோசாப்ட் வட்டு இயக்கு தளம்) என்பது எக்ஸ்86 அடிப்படையிலான தனி மேசைக் கணினிகளுக்கான இயக்கு தளம் ஆகும். இது டாஸ் வகை இயக்கு தளங்களுக்காக அதிகம் பாவிக்கப்பட்டதும், 1980 முதல் 1990கள் வரையில் ஐபிஎம் தனி மேசைக் கணினி முதன்மை இயக்கு தளமும் ஆகும். பின்பு வரைகலை பயனர் இடைமுகம் இயக்கு தளங்களில் அறிமுகமானதும், குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோசு இயக்கு தளத்தின் பல்வேறு உற்பத்திகளினால் இது பின்தள்ளப்பட்டது.
குறிப்புகள்
உசாத்துணை