வாதவியல் (Rheumatology) என்பது வாத நோய்களுக்கானச் சிகிச்சை, நோயறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது மற்றும் குழந்தை மருத்துவத்தின் சிறப்பு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இப்பிரிவில் நிபுணரான மருத்துவரை வாதவியலாளர் (Rheumatologist) அல்லது முடவியலாளர் எனலாம். மூட்டுகள், மென்திசுக்களை உள்ளடக்கிய தன்னுடல் தாக்குநோய்கள், நாள அழற்சி, பரம்பரையாக வரும் இணைப்பிழைய பிறழ்வுகள் ஆகிய மருத்துவ இடர்ப்பாடுகளுக்கு மருத்துவம் செய்பவர்கள் வாதவியலாளர்கள் ஆவர்.
தற்பொழுது, இவ்விதமான பிணிகள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் பிறழ்வினைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, வாதவியல் என்பது அதிகளவு நோயெதிர்ப்பியல் துறையைச் சார்ந்தது எனலாம். தற்கால வாதவியலில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றமாக கடும் வாதநோயைக் கட்டுப்படுத்தும் உயிரிய மருந்துகளைக் (biologics) கண்டறிந்ததைக் குறிப்பிடலாம்[1].