மொட்டுமுனைத் தோலின் வெளிப்பகுதி வழைமையான தோல் போன்றதே; ஆனால் முனைத்தோலின் உட்புறம் கண் இமை அல்லது வாய்த் தோலின் உட்பகுதிகளைப் போல மென்தோல் ஆக உள்ளது. மொட்டுமுனைத் தோல் ஆண்குறியுடன் கடிவாளத் திசுக்களால் பிணைக்கப்பட்டுள்ளதால் நகர முடியும். தசைகளுக்குமீள்திறன் உள்ளது.[1] ஆண்குறியின் மிகவும் உணர்திறனுடைய ஐந்து இடங்கள் முன்தோலில் உள்ளன.[2]
பயன்கள்
மொட்டுமுனைத் தோல் மொட்டை ஈரமாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் பாலுறவின்போது பல நரம்புத்தொகுதிகள் உள்ளதால் இன்பத்தை கூட்டவும் பயனாவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.[3]
இருப்பினும், மோசசு மற்றும் பெய்லி (1998) "மொட்டு முனைத்தோல் ஆணின் பால்வினை இன்பத்தைக் கூட்டுவதாக தெரியக் காட்டவில்லை " எனக் கூறுகின்றனர்.[4]
விருத்த சேதனம் என்பது மொட்டுமுனைத் தோலை மத சடங்குகளுக்காக அல்லது அறுவை சிகிட்சை மூலம் நீக்குவதாகும். இவ்வாறு முனைத்தோலை நீக்குவதால் சில நோய்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்தும் உள்ளது; ஆனால் இத்தகைய பயன் மிகவும் குறைவானதாக பல மருத்துவ சங்கங்கள் நம்புகின்றன. ஒய்யாரத்திற்காக சில நேரங்களில் முன்தோலில் துளை இடுவதும் பிளவுபடுத்துவதும் உண்டு.[5]
↑Moses S; Bailey RC, Ronald AR (1998). "Male circumcision: assessment of health benefits and risks". Sexually Transmitted InfectionsVol 74 (Issue 5): 368–373. http://sti.bmj.com/cgi/reprint/74/5/368. பார்த்த நாள்: 2007-04-28. "There is indirect evidence suggesting that the foreskin may have an important sensory function, although aside from anecdotal reports, it has not been demonstrated that this is associated with increased male sexual pleasure.".