பர்மாவில் பிரித்தானிய ஆட்சி (British rule in Burma) (ஆட்சி காலம்: 1824 - 1948), பர்மாவில் வணிகம் செய்ய வந்த பிரித்தானியர்கள், சிறிது சிறிதாக பர்மாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டே, 1824 - 1886 கால கட்டத்தில் நடந்த மூன்று ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களாலும், பின்னர் பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களும் பர்மாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
1865க்கு பின்னர் நிர்வாக வசதிக்காக அடியிற்கண்டவாறு பிரிக்கப்பட்டது:
1937ஆம் ஆண்டு முதல், நிர்வாக வசதிக்காக பிரித்தானியாவின் இந்தியாவிருந்து பர்மாவை தனியாக பிரித்து பிரித்தானிய துணைநிலை ஆளுனர் கட்டுப்பாட்டின் கீழ் பர்மாவை பிரித்தானிய இந்திய அரசினர் ஆண்டனர்.[4] பிரித்தானிய சட்ட திட்டங்களின் அடிப்படையில், மக்களால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் பர்மிய நாடளுமன்ற பேரரவை அமைக்கப்பட்டது. பர்மாவின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பா மௌவை 1939ஆம் ஆண்டில் யு ஷா வெளியேற்றி ஆட்சியை கைப்பற்றி, பிரித்தானியர்களால் கைது செய்யப்படும் வரை, 19 சனவரி 1942 முடிய பதவியில் இருந்தார்.
இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் 1942இல் பர்மாவை, பிரித்தானியரிடமிருந்து, ஜப்பானிய இராணுவம் கைப்பற்றி 1945ஆம் ஆண்டு வரை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. பர்மா அரசின் தலைநகராக ரங்கூன் நகரம் விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் 1945இல் பிரித்தானிய இராணுவம் மீண்டும் பர்மாவை ஜப்பானிடமிருந்து கைப்பற்றியது.
பர்மிய பிரித்தானிய அரசுக்கு எதிராக, இராணுவ அதிகாரியும், அரசியல்வாதியுமான ஆங் சான் பர்மாவின் விடுதலைக்கு பாடுபட்டவர். 26 டிசம்பர் 1942இல் பர்மா புரட்சி இராணுவத்தை உருவாக்கியவர். 4 சனவரி 1948 அன்று பர்மா விடுதலை அடைதற்கு அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் 19 சூலை 1947இல் படுகொலை செய்யப்பட்டார்.