நெடுங்குழு 10 தனிமங்கள்

நெடுங்குழு → 4
↓  கிடை வரிசை
4 Nickel, electrolytic made, 99.9% pure
28
Ni
5 Palladium crystal
46
Pd
6 Platinum nugget
78
Pt
7 110
Ds

நெடுங்குழு 10 உள்ள தனிமங்களை நிக்கல் தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்குழுவில் இடை நிலை உலோகங்களான நிக்கல்(Ni), பலேடியம்(Pd),பிளாட்டினம்(Pt), டார்ம்சிட்டாட்டியம்(Ds) ஆகிய நான்கும் இருக்கின்றன. இதில் மெய்ட்னீரியமின் எல்லா ஓரிடத்தான்களும் கதிரியக்கப் பண்புகளை கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கப்படாத இவை மிகச் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் ஒரு எதிர்மின்னியை கொண்டுள்ளது. அனால் அதிசயக்கும் விதமாக பலேடியம் மட்டும் பதினெட்டு எதிர்மின்னிகளை கொண்டுள்ளது.

அணு எண் தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
28 நிக்கல் 2, 8, 17, 1
46 பலேடியம் 2, 8, 18, 18
78 பிளாட்டினம் 2, 8, 18, 32, 17, 1
110 டார்ம்சிட்டாட்டியம் 2, 8, 18, 32, 32, 17, 1

நெடுங்குழு 10 உள்ள தனிமங்கள் பெரும்பாலும் வெள்ளை அல்லது வெளிர் சாம்பல் நிறத்தில் உள்ளது. எளிதில் கருக்காத இவை மினுமினுக்கும் ஆற்றல் உடையது. இவை பெரும்பாலும் மின்னியல் பயன்பாட்டிற்கும் , கலப்புலோகம் தயாரிக்கவும், வேதியியல் வினைவேகமாற்றியாகவும், ஆபரணம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!