திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு
Tripura Tribal Areas Autonomous District Council |
---|
வகை |
---|
வகை | |
---|
உறுப்பினர்கள் | 30 உறுப்பினர்கள் |
---|
தேர்தல்கள் |
---|
| 28 பேர், வாக்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர் |
---|
| 2 ஆளுநரால் நியமிக்கப்படுவோர் |
---|
கூடும் இடம் |
---|
ஆட்சிக் குழுவின் தலைமையகம், குமுலுங் |
வலைத்தளம் |
---|
http://tripura.nic.in/ttaadc/ |
திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு , இந்திய மாநிலமான திரிபுராவின் பழங்குடியின வட்டாரங்களை ஆட்சி செய்யும் தன்னாட்சி மாவட்டக் குழு அமைப்பாகும். இதன் தலைமையகம் குமுல்வுங்கில் உள்ளது. பழங்குடியின மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்ள, இந்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன்வழி, ஆறாவது அட்டவணையின்படி, இந்த ஆட்சிக் குழு ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஆட்சிக் குழு 7,132.56 சதுர கி.மீ நிலப்பரப்பை நிர்வகிக்கிறது. இது திரிபுரா மாநிலத்தின் பரப்பளவில் 68% நிலப்பரப்பாகும். இந்த ஆட்சிக் குழுவுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதி காடு, மலைகளால் நிரம்பியுள்ளது.
இந்த ஆட்சிக் குழுவுக்கு உட்பட்ட பகுதியில் 679,720 மக்கள் வசிக்கின்றனர்.
இந்தக் குழுவில் 30 உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 28 உறுப்பினர்கள் தேந்ர்தெடுக்கப்படுகின்றனர். இருவரை ஆளுநர் நியமிப்பார். 28 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் பழங்குடியினராக இருக்க வேண்டும் என்பது விதி. இந்தக் குழுவுக்கு சட்டமியற்றும் அதிகாரமும், செயலாற்றும் அதிகாரமும் உண்டு.
டிசம்பர், 2020-இல் இந்த அமைப்பின் பெயர் திப்ரா பிரதேசக் குழு (Tipra Territorial Council (TTC) எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]
தொகுதிகள்
திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுவில் மொத்தமுள்ள 30 உறுப்பினர்களில் 28 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும்; 2 உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். 2021ஆம் நடைபெற்ற தேர்தலில் திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சிகள் கூட்டணி அமைத்து முறையே 16 மற்றும் 2 தொகுதிகளைக் கைப்பற்றினர்.[2][3]
எண்
|
தொகுதி
|
பிரிவு
|
உறுப்பினர்
|
1
|
தம்சாரா-ஜாம்பூய்
|
பழங்குடிகள்
|
பாபா ரஞ்சன் ரியாங்
|
2
|
மச்மரா
|
பொதுத்தொகுதி
|
|
3
|
தஸ்தா-காஞ்சன்பூர்
|
பொதுத்தொகுதி
|
|
4
|
கரம்சாரா
|
|
பிமல் காந்தி சக்மா
|
5
|
சாவ்மனு
|
பழங்குடிகள்
|
ஹோங்ஷா குமார் திரிபுரா
|
6
|
மனு-சைலெங்தா
|
பொதுத்தொகுதி
|
|
7
|
தெம்சாரா-கச்சுசர்ரா
|
பழங்குடிகள்
|
திரேந்திரா தேவ்வர்மா
|
8
|
கங்காநகர்-கந்தாச்சாரா
|
பழங்குடிகள்
|
பூமிகா நந்தா ரியாங்
|
9
|
ஹலா ஹலி-அஷரம்பாரி
|
பழங்குடிகள்
|
ஆனந்த தேவவர்மா
|
10
|
குலை-சம்பாஹவர்
|
பழங்குடிகள்
|
அனிமேஷ் தேவ் வர்மா
|
11
|
மகாராணிபுர்-தெலியமுரா
|
பழங்குடிகள்
|
கமல் கலை
|
12
|
ராமச்சந்திர காட்
|
பழங்குடிகள்
|
சுகேல் தேவ் வர்மா
|
13
|
சிம்னா-தமாக்கரி
|
பழங்குடிகள்
|
ரவீந்திர தேவ் வர்மா
|
14
|
புத்ஜங் நகர்-வாக்கிநகர்
|
பழங்குடிகள்
|
ருனியல் தேவ் வர்மா
|
15
|
ஜிரானியா
|
பழங்குடிகள்
|
ஜெகதீஷ் தேவ் வர்மா (குழுத் தலைவர்)
|
16
|
மந்தைநகர்—புலின்பூர்
|
பழங்குடிகள்
|
சிட்டா ரஞ்சன் தேவ் வர்மா
|
17
|
பெகுவார்ஜலா-ஜனமேஜய நகர்
|
பழங்குடிகள்
|
கணேஷ் தேவ் வர்மா
|
18
|
தகர்ஜாலா-ஜம்புய்ஜாலா
|
பழங்குடிகள்
|
பிரத்யோத் விக்கிரம் மாணிக்யா தேவ் வர்மா
|
19
|
அம்தாலி-கோலாகாத்தி
|
பழங்குடிகள்
|
உமா சங்கர் தேவ்வர்மா
|
20
|
கில்லா-பாக்மா
|
பழங்குடிகள்
|
பூர்ண சந்திர ஜமாதியா (CEM)
|
21
|
மகாராணி-செல்லாகங்
|
பழங்குடிகள்
|
சாம்ராட் ஜமாதியா
|
22
|
கத்தாலியா-மீர்ஜா-ராஜாபூர்
|
பழங்குடிகள்
|
பதலுச்சான் திரிபுரா
|
23
|
அம்பிநகர்
|
பழங்குடிகள்
|
சதகர் கலை
|
24
|
ராய்மா சமவெளி
|
பழங்குடிகள்
|
ராஜேஷ் திரிபுரா
|
25
|
நதுன்பஜார்-மால்பசா
|
பழங்குடிகள்
|
டோலி ரியாங்
|
26
|
வீர சந்திரநகர்-கலாஷி
|
பழங்குடிகள்
|
சஞ்சித் ரியாங்
|
27
|
கிழக்கு மாதுரிப்பூர்-பூராதலி
|
பழங்குடிகள்
|
தேவ்ஜித் திரிபுரா
|
28
|
சிலாச்சாரி-மனுபங்குல்
|
பழங்குடிகள்
|
கஞ்ஜோங் மோக்
|
29
|
நியமன உறுப்பினர்
|
சிறுபான்மைக் குழுவினர்
|
சிப்சென் கைபெங்
|
30
|
நியமன உறுப்பினர்
|
ஆளுரரின் விருப்பப்படி
|
வித்யூத் தேவ்வர்மா
|
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்