ரியோ டி ஜெனீரோ (போர்த்துக்கீசிசம்: Rio de Janeiro, அல்லது "தை மாதத்தின் ஆறு") பிரேசிலின் பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. இந்நகரம் ரியோ டி ஜெனீரோ மாநிலத்தின் தலைநகரும் ஆகும்.
நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'ரியோ' என்கிறார்கள்.
நகரத்தின் சிறப்புகள்
உலக அதிசயம்
பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. முன்னால் உலக அதிசயங்களில் ஒன்றான ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.
யுனெஸ்கோ அறிவிப்பு
ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு , இந்நகரத்தின் ஒரு பகுதியை உலகக் கலாச்சார மையமாக அறிவித்தது.
ஒலிம்பிக்சு போட்டியை யார் நடத்துவது
2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தப் போட்டியிட்டதில் இறுதிச் சுற்றில் ரியோ டி ஜெனீரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரைத் தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.[1]
அமைவிடம்
ரியோ டி ஜெனீரோ, பிரேசிலின் அட்லாண்டிக் பெருங்கடலின் முகட்டில் அமைந்துள்ளது. மேலும் மகர ரேகைக்கு அருகில் உள்ளது.
சீதோசனம்
ரியோ டி ஜெனீரோ, வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. டிசம்பரில் இருந்து மார்ச்சு வரை இங்கு மழைக்காலம் ஆகும். சீதோசனம் 45 °C க்கு அதிகமாகவும் 25 °C க்கு குறையாமலும் இருக்கும்.
இந்நகரின் மக்கள் தொகையில் 53% பெண்களாகவும் ,48% ஆண்களாகவும் உள்ளனர். இந்நகரின் வாழும் தம்பதியினருள் (திருமணமான ஜோடிகளில் ) 1,200,697 பேர் ஆண்-பெண் ஜோடியர் ஆவர். மேலும் 5,612 பேர் ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் தம்பதியினர் ஆவர். இந்நாட்டில் ஒருபால் திருமணம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.
மதங்கள்
இந்நகரில் வாழும் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் இறைமறுப்பு கொள்கையும் பரவலாகக் காணப்படுகிறது.
↑"Barsa Planeta Ltda". Brasil.planetasaber.com. Archived from the original on 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)