ஆத்திரியப் பேரரசு (Austrian Empire, Kaiserthum Österreich) என்பது ஆத்திரிய முடியாட்சியிலிருந்து 1804 இல் அதிகாரபூர்வப் பிரகடணத்துடன் உருவாக்கப்பட்ட மத்திய ஐரோப்ப பேரரசு ஆகும். இது பல்தேசியப் பேரரசாகவும் உலக வல்லமைகளின் ஒன்றாகவும் இருந்தது. புவியியல் ரீதியாக, இது உருசியப் பேரரசிற்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடாக இருந்தது (621,538 சதுர கிலோமீட்டர்கள் [239,977 ச. மைல்]).[1] மேலும், உருசியாவிற்கும் பிரான்சிற்கும் அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்ததோடு, செருமன் கூட்டமைப்பு நாடுகளில் பெரியதாகவும் பலமிக்கதாகவும் இருந்தது.