வடக்கு இரயில்வே துடுப்பாட்ட அரங்கம் (Northern Railway Cricket Ground) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் சோத்பூரில் உள்ளது. பல்நோக்கு விளையாட்டு அரங்கமான இங்கு கால்பந்து , துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1970 ஆம் ஆண்டு இராசத்தான் துடுப்பாட்ட அணி விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியபோது[1] இங்கு இரண்டு ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன.[2] பின்னர் 1972 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக இராசத்தான் துடுப்பாட்ட அணி விளையாடியபோது ஒரே ஒரு ரஞ்சிக் கோப்பை போட்டி இங்கு நடைபெற்றது.[3] அப்போது முதல் இங்கு முதல் தரமல்லாத இதர துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.[4]