மேற்கு திரிப்புரா மாவட்டம், இந்திய மாநிலமாகிய திரிப்புராவில் உள்ளது.[1]. முற்காலத்தில் இது அரசப் பகுதியாக இருந்தது. இது மலைப்பிரதேசம் ஆகும். இங்கு காபி விளைவிக்கின்றனர். இது சதர், பெலோனியா, பிஷால்கர், சோனாமுரா, கோவாய், தெலியமுரா ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு அதிகளவிலான இந்துக்கள் வாழ்கின்றனர். தேசிய கல்வியறிவு சராசரியை விடவும் இங்குள்ள மக்களின் சராசரி அதிகம். இந்த மாவட்டத்தின் கோவாய் வட்டம், தெலியமுரா வட்டம் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கோவாய் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, சிபாகிஜாலா மாவட்டம் உருவாக்கப்பட்டது.[2]