போபால்-இலக்னோ ஏழைகள் ரதம் விரைவுவண்டி (Lucknow–Bhopal Garib Rath Express) என்னும் இந்தத் ரயில் வாராந்திர அதிவிரைவு வண்டியாகச் செயல்பட்டு வருகிறது.[1] இது மத்தியபிரதேசத்தின் தலைநகரமான போபால் சந்திப்பில் இருந்து உத்திரப்பிதேசத்தின் தலைநகரமான இலக்னோ சந்திப்புத் தொடருந்து நிலையம் (LJN) வரை இயங்குகிறது. இந்த ரயில் சேவை 2011-2012ஆம் ஆண்டின் ரயில்வே நிதிநிலையில் அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் பினா-ஜான்சி வழித்தடத்தில் போபால் மற்றும் இலக்னோ இடையே செல்கிறது. தொடருந்தின் முக்கிய நிறுத்தங்கள்:
இந்தத் தொடருந்து மொத்தம் பன்னிரண்டு பெட்டிகள் கொண்டதாகும். இதில் பத்து பெட்டிகள் குளிருட்டப்பட்ட மூன்று அடுக்குப் பெட்டிகள், இரண்டு சுமை/மின்னாக்கி பெட்டிகள் உள்ளன.
இந்த இரயிலின் சராசரி வேகம் 63 கி.மீ/மணி ஆகும். இது ஒரு வாரந்திர ரயில் ஆகும்.
இந்த வழித்தடத்தில் இயங்கும் பிற ரயில்கள் 12183 / 12184 போபாஸ் - லக்னோ பிராத்கட் விரைவுவண்டி