2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விதிஷா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 155,951 ஆகும். அதில் ஆண்கள் 81,488; பெண்கள் 74,463 ஆக உள்ளனர். விதிஷா நகரத்தில் இந்துக்கள் 137,373 (88.09 %); இசுலாமியர்கள் 10,089 (6.47 %); சமனர்கள் 7,376 (4.73 %) மற்றும் பிற மக்கள் 1.,113 (0.72%) ஆக உள்ளனர்.[1]
கி மு ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சுங்கப் பேரரசு, சாதவாகனப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசின் காலத்தில் விதிஷா நகரம் பெரும் வணிக மையமாக விளங்கியது. விதிஷா நகரத்திலிருந்து 9 கி மீ தொலைவில் பௌத்த தலமான சாஞ்சி உள்ளது. அசோகர், இளவரசராக இருந்த போது விதிஷா பகுதியின் ஆளுநராக இருந்தவர்.