பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி ( United Nations Development Fund for Women) [1] என்பது திசம்பர் 1976 இல் சர்வதேச மகளிர் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான பத்தாண்டுக்கான தன்னார்வ நிதியாக முதலில் நிறுவப்பட்டது. இதன் முதல் இயக்குனராக மார்கரெட் சி. சினைடர் என்பவர் நியமிக்கப்பட்டார். பெண்களின்மனித உரிமைகள், அரசியல் பங்கேற்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் புதுமையான திட்டங்கள் மற்றும் உத்திகளுக்கு ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான மேம்பாட்டு நிதியம், நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. 1976 ஆம் ஆண்டு முதல் இது பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்தை அதன் திட்ட அலுவலகங்கள் மற்றும் உலகின் முக்கிய பிராந்தியங்களில் உள்ள பெண்கள் அமைப்புகளுடன் இணைப்புகள் மூலம் ஆதரித்தது. வரவு செலவுத் திட்டங்களுக்கான இதன் பணி 1996 இல் தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது. மேலும், கிழக்கு ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய அமெரிக்கா மற்றும் ஆண்டியன் பகுதிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது . அனைத்து நாடுகளிலும் பொருளாதார நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பாலினப் பொறுப்பு வரவு செலவுத் திட்டங்களின் ஐ.நா அமைப்பு முழுவதும் விழிப்புணர்வை அதிகரிக்க இது வேலை செய்தது. 2011 இல், ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான மேம்பாட்டு நிதியமானது வேறு சில சிறிய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து ஐ. நா. பெண்கள் எனற பன்னாட்டு அமைப்பானது
கண்ணோட்டம்
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான மேம்பாட்டு நிதியமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் நெருக்கமாகப் பணிபுரியும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இருப்பினும் நிதியின் வளங்கள் மற்ற ஐக்கிய நாடுகள் அவைகளின்] வளர்ச்சி ஒத்துழைப்பு முகமைகளின் பொறுப்புகளுக்கு மாற்றாக இல்லாமல் கூடுதலாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் குறிப்பிட்டது. [2][3] பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான மேம்பாட்டு நிதியம் நிதியளித்தது.[3] நிதியமானது பெண்கள் "தொண்டு பெறுபவர்களை விட மாற்றத்திற்கான சொந்த முகவர்களாக" மாற உதவும் உத்தியை உருவாக்கியது. [3]பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாடு உருவாக்கிய வழிகாட்டுதல்களை ஐ.நா.திட்டங்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் நிதியம் உதவியது.[4]பெண்களின் உரிமைகளை மனித இது ஈடுபட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பாலின சமத்துவத்தை ஆதரித்தது. [5] ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான மேம்பாட்டு நிதியமானது பெண்களின் உரிமைகளை அமைதி மற்றும் பாதுகாப்பின் பிரச்சினையாகக் கண்டது. [6]
Heyzer, Noeleen (November 1998). "Working Towards a World Free from Violence Against Women: UNIFEM's Contribution". Gender and Development6 (3): 17–26. doi:10.1080/741922830. பப்மெட்:12294408.