புளியம்பட்டி (PULIAMPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4][5] பழனி வருவாய் வட்டத்தின் இருபத்திரெண்டாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:22) ஆகும்.[6]
அமைவிடம்
பழனியிலிருந்து தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் புளியம்பட்டி பிரிவிலிருந்து கிழக்கே சுமார் 0.8 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 521 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, புளியம்பட்டி கிராமத்தில் 640 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 2478 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.24 %. இதில் 1269 பேர் ஆண்கள்; 1209 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 2ம், நடுநிலைப் பள்ளி 1ம் உள்ளது.[8]
முக்கிய பயிர்
அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
கிராமத்தின் தகவல்கள்
- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 423 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 945.72.5 ஹெக்டேர்- (2336.93.ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு