பன்னாட்டு பறவை வாழ்க்கை (BirdLife International) என்பது உலகளாவிய அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இது பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கப் பாடுபடுகிறது.[1] பன்னாட்டு பறவை வாழ்க்கை அமைப்பின் முன்னுரிமைகளில் பறவை சிற்றினங்கள் அழிவதைத் தடுப்பது, பறவைகளுக்கான முக்கியமான தளங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பது, முக்கிய பறவை வாழ்விடங்களைப் பராமரித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் மற்றும் உலகளவில் பறவைப் பாதுகாப்பார்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
பறவைகள் பாதுகாப்பிற்கான அரச அமைப்பு, ஜப்பானின் காட்டுப் பறவைச் சமூகம், ஆபர்ன் தேசிய சமூகம் மற்றும் அமெரிக்கப் பறவை பாதுகாப்பகம் உள்ளிட்ட 116 நாடுகளின் கூட்டமைப்பின் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.[2]
பன்னாட்டு பறவை வாழ்க்கை சுமார் 13,000 முக்கியமான பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இது பறவைகளுக்கான பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின்செம்பட்டியல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.[3][4] 2015ஆம் ஆண்டு நிலவரப்படி, 1,375 பறவை சிற்றினங்கள் (மொத்தத்தில் 13%) அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன (மிக அருகிய இனம், அருகிய இனம் அல்லது அழிவாய்ப்பு இனம்) என பேர்டுலைப் இன்டர்நேஷனல் நிறுவியுள்ளது.[5]
பன்னாட்டு பறவை வாழ்க்கை, பறவைகள் வாழ்க்கை:இதழ் என்ற காலாண்டு ஆங்கில இதழை வெளியிடுகிறது. இதில் பறவைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றிய சமீபத்திய செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ கட்டுரைகள் இடம்பெறுகின்றன.[6][7]
வரலாறு
பன்னாட்டு பறவை வாழ்க்கை 1922-ல் அமெரிக்க பறவையியல் வல்லுநர்களான டி. கில்பர்ட் பியர்சன் மற்றும் ஜீன் தியோடர் டெலாகோர் ஆகியோரால் பன்னாட்டுப் பறவை பாதுகாப்புக் குழுவாக நிறுவப்பட்டது. 1928-ல் பறவைகள் பாதுகாப்பிற்கான பன்னாட்டுக் கூட்டமைப்பு எனவும், 1960 -ல் பறவைகள் பாதுகாப்பிற்கான பன்னாட்டுக் குழுமம் எனவும் 1993-ல் பேர்ட்லைப் இன்டர்நேஷனல் எனவும் மறுபெயரிடப்பட்டது.[8][9] .
உலகளாவிய திட்டங்கள்
பன்னாட்டு பறவை வாழ்க்கை ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பசிபிக் ஆகிய நாடுகளில் ஒன்பது பாதுகாப்பு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.[10] இந்தத் திட்டங்களில் பாதுகாப்புப் பணிகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான கட்டமைப்பை வழங்குகின்றன, மேலும் முக்கியமான பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பகுதிகள் திட்டம்,[11] கடல்சார் திட்டம்,[12] அழிவுகளைத் தடுக்கும் திட்டம்,[13][14] மற்றும் பறக்கும் பாதைகள் திட்டம் ஆகியவை அடங்கும்.[15]
சர்ச்சைகள்
காட்டு பறவை கூட்டமைப்பு தைவானின் மறுபெயர்
2008ஆம் ஆண்டில், காட்டுப் பறவை கூட்டமைப்பு, தைவானின் ஆங்கிலப் பெயர், பன்னாட்டு பறவை வாழ்க்கையின் கோரிக்கைக்கு இணங்க, சீனா மக்கள் குடியரசின் அழுத்தத்திலிருந்து உருவாகும் வகையில் சீனா காட்டுப் பறவை கூட்டமைப்பு என மறுபெயரிடப்பட்டது.[16] 2020ஆம் ஆண்டில் பேர்ட்லைப் இன்டர்நேஷனல் அமைப்பு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆங்கிலப் பெயரானது தைவான் காட்டுப் பறவை கூட்டமைப்பு என மாற்றப்பட்டது.[17][18]
தைவானின் சீனா காட்டுப் பறவை கூட்டமைப்பு நீக்கம்
திசம்பர் 2019-ல், பன்னாட்டு பறவை வாழ்க்கைதைவானின் பெயரிடப்பட்ட சீனா காட்டுப் பறவை கூட்டமைப்பிடம், பின்வரும் சிக்கல்கள் அல்லது கூட்டாண்மை திட்டத்திலிருந்த அபாயத்தை அகற்றுமாறு கேட்டுக் கொண்டது:[19]
இந்த அமைப்பின் சீனப் பெயர் (சீன மொழி: 中華民國野鳥學會 lit. 'சீனக்குடியரசின் காட்டுப் பறவை கூட்டமைப்பு') பன்னாட்டு பறவை வாழ்க்கை செயல்பாட்டிற்கு குறுக்கீட்டினை ஏற்படுத்துவதால் பெயர் மாற்றப்பட வேண்டும்.
சீனா காட்டுப் பறவை கூட்டமைப்பு, சீனக் குடியரசின் (தைவான்) சட்டப்பூர்வமான தன்மையை ஊக்குவிக்கவோ அல்லது வாதிடவோ கூடாது என்று முறையாக உறுதியளிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.
பன்னாட்டு பறவை வாழ்க்கை, தைவான் அரசாங்கம் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட முகவரின் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தொடர்புடைய அல்லது நிதியுதவியுடன் தொடர்புடைய எந்தவொரு நிகழ்விலும் அதன் இலச்சினையினை இணைக்கவோ அல்லது தொடர்புப்படுத்தவோ அனுமதிக்காது.
தைவான் கொடி, அல்லது சின்னங்கள் காட்டப்படும் எந்த ஆவணத்திலும் பன்னாட்டு பறவை வாழ்க்கை பெயர் அல்லது இலச்சினையினை பயன்படுத்த அனுமதிக்காது.
இருப்பினும், பன்னாட்டு பறவை வாழ்க்கை சீனக்குடியரசின் காட்டுப் பறவை கூட்டமைப்பு அதன் அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்தாலும், அது பன்னாட்டு பறவை வாழ்க்கை கூட்டாண்மை திட்டத்திலிருந்து நீக்கப்படலாம் என்று கூறியது. 7 செப்டம்பர் 2020 அன்று, சீனக்குடியரசின் காட்டுப் பறவை கூட்டமைப்பு அதன் பொதுச் சபைக் கூட்டத்தில் பேர்ட்லைப் இன்டர்நேஷனலின் கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, பன்னாட்டு பறவை வாழ்க்கை உலகளாவிய கூட்டமைப்பிற்கு சீனக்குடியரசின் காட்டுப் பறவை கூட்டமைப்பினை அதன் கூட்டாண்மை திட்டத்திலிருந்து நீக்க வாக்களித்தது.[20][21]
பன்னாட்டு பறவை வாழ்க்கை தலைமை நிர்வாக இயக்குநர் பேட்ரிசியா சூரிதா பின்னர் ராய்ட்டர்ஸ் "பேச்சுத் தடையாணை" என்று விவரித்ததை வெளியிட்டார். சீனக்குடியரசின் காட்டுப் பறவை கூட்டமைப்பின் "துரதிருஷ்டவசமான பொது அறிக்கை" பற்றி பகிரங்கமாகக் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். "இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் ஏதேனும் கேள்விகளைப் பெற்றால், தயவுசெய்து கருத்து தெரிவிக்க வேண்டாம், அதற்குப் பதிலாக இந்த விடயத்தை என்னிடம் நேரடியாகப் பகிரவும்" என்று சூரிதா எழுதினார்.[22]
சீனக்குடியரசின் காட்டுப் பறவை கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டு பறவை வாழ்க்கை இடையேயான கடிதங்கள், சீனக்குடியரசின் காட்டுப் பறவை கூட்டமைப்பு அகற்றப்படுவதற்கு முன்பு நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பெயர் மாற்றம் குறித்து விவாதிக்கத் தயாராக இருந்தது என்பதை நிரூபிக்க, 19 செப்டம்பர் 2020 அன்று சீனக்குடியரசின் காட்டுப் பறவை கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டது.[17][23]
மேற்கோள்கள்
↑"BirdLife Partners". BirdLife International. Archived from the original on 28 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑BirdLife International. "ABC joins the flock!". BirdLife (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
↑"Our History". BirdLife International. Archived from the original on 2021-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
↑"Regions". BirdLife International. பார்க்கப்பட்ட நாள் 30 August 2015.
↑Donald, Paul F.; Fishpool, Lincoln D. C.; Ajagbe, Ademola; Bennun, Leon A.; Bunting, Gill; Burfield, Ian J.; Butchart, Stuart H. M.; Capellan, Sofia et al. (June 2019). "Important Bird and Biodiversity Areas (IBAs): the development and characteristics of a global inventory of key sites for biodiversity" (in en). Bird Conservation International29 (2): 177–198. doi:10.1017/S0959270918000102. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-2709.