பன்னா

பன்னா
நகரம்
பன்னா is located in மத்தியப் பிரதேசம்
பன்னா
பன்னா
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பன்னா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°16′N 80°10′E / 24.27°N 80.17°E / 24.27; 80.17
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பன்னா மாவட்டம்
ஏற்றம்
410 m (1,350 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்59,091
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
488001
ஐஎசுஓ 3166 குறியீடுIN-MP
வாகனப் பதிவுMP- 35
இணையதளம்www.panna.nic.in

பன்னா (Panna), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த பன்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சி மன்றமும் ஆகும். இந்நகரம் வைரச் சுரங்கங்களுக்கு பெயர் பெற்றது.

வரலாறு

பன்னா மாவட்டப் பூர்வகுடிகளாக கோண்டு மக்களை வெற்றி கொண்டு, சந்தேல இராசபுத்திர மன்னர் சத்திரசால், கிபி 1731-இல் பன்னா இராச்சியத்தை நிறுவினர். பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, 1818 முதல் பன்னா இராச்சியம், சுதேச சமஸ்தானமாக, இந்தியப் பிரிவினைக்கு பின்னர் 1950 வரை நீடித்தது. 1950-இல் பன்னா இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

புவியியல்

மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கில், 24°43′N 80°12′E / 24.72°N 80.2°E / 24.72; 80.2 பாகையில், கடல் மட்டத்திலிருந்து 410 மீட்டர் உயரத்தில், விந்திய மலைத்தொடர்களில் பன்னா நகரம் உள்ளது.[1]

போக்குவரத்து

பன்னா நகரத்திற்கு அருகமைந்த வானூர்தி நிலையம் கஜுராஹோ நகரத்தில் உள்ளது. அருகமைந்த கஜுராஹோ தொடருந்து நிலையம் 45 கிமீ தொலைவிலும், சத்னா தொடருந்து நிலையம் 75 கிமீ தொலைவிலும் உள்ளது. பன்னா பேரூந்து நிலையம், மத்தியப் பிரதேசத்தின் அனைத்து நகரங்களையும் இணைக்கிறது.

மக்கள்தொகை பரம்பல்

27 வார்டுகள் கொண்ட பன்னா நகராட்சியின் மக்கள்தொகை 50, 820 ஆகும். [2]

சுற்றுலாத் தலங்கள்

பன்னா அருவியின் அகலப்பரப்புக் காட்சி

வைரச் சுரங்கங்கள்

விந்திய மலைத்தொடரின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்த பன்னா நகரத்தைச் சுற்றிலும் 150 மைல் சுற்றளவில் வைரச் சுரங்கங்கள் உள்ளது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!