40°45′23″N 73°59′02″W / 40.756329°N 73.983921°W / 40.756329; -73.983921
தேசிய கடன் கடிகாரம், (National Debt Clock) தொடர்ந்து அமெரிக்காவின் தற்போதைய மொத்த தேசிய கடன் மற்றும் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தின் கடன் பங்கை இற்றைப்படுத்திக் காட்டும் காட்சிப் பலகை ஆகும். அது தற்போது நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் ஆறாவது அவென்யூவில் நிறுவப்படுள்ளது.
உயரும் தேசிய கடனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய நியூயார்க் நகர ரியல் எஸ்டேட் டெவலப்பர் சீமோர் துர்ச்ட்டுக்கு (Seymour Durst) தேசிய கடன் கடிகாரம் அமைக்கும் யோசனை தோன்றியது. 1989 ஆம் ஆண்டு முதல் கடிகாரம் நிறுவப்பட்டது. இக்கடிகாரத்தை நிறுவும் செலவிற்கு துர்ச்ட் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த முதல் கடிகாரம் ஆறாவது அவென்யூவில், 42 வது மற்றும் 43 வது அவென்யூக்களுக்கிடையில் - டைம்ஸ்சதுக்கத்தில் இருந்து ஒரு கட்டடம் தள்ளி அமைந்தது. அந்த சமயத்தில் தேசிய கடன் $ 3 டிரில்லியன் கீழ் இருந்தது; ஆனால் உயரும் போக்கில் இருந்தது. 2000 முதல் 2002 வரை கடன் வீழ்ச்சியடைந்ததினால் கடிகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படிருந்த்தது.
2004 ஆம் ஆண்டு அசல் கடிகாரம் அழிக்கப்பட்டு அதற்கு பதிலீடாக தற்போதைய கடிகாரம் அமைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசிய கடன் முதல் முறையாக 10 டிரில்லியன் டாலர் தாண்டியது. இதனால் அமெரிக்க தேசிய கடன் கடிகாரம் இலக்கங்கள் பற்றாகுறை ஏற்பட்டது என செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது.[1][2][3][4]
1995 இல் சீமோரின் இறப்பிற்குப் பின் அவரது மகன் மகன் டக்ளஸ் ’துர்ச்ட் அமைப்பு’ மூலம் தேசிய கடன் கடிகாரப் பொறுப்பை எடுத்து கொண்டார். செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு, இக் கடிகாரத்தைப் பராமரிக்கும் பணியை ஏற்ற துர்ச்ட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜொனாதன் துர்ச்ட், நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் "வரும் ஆண்டுகளுக்கான" கடிகாரம் பராமரிப்பு திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.[5]
சீமோர் துர்ச்ட்டால் உருவாக்கப்பட்ட தேசிய கடன் கடிகாரம் 1989 ஆம் ஆண்டு பொருத்தப்பட்டது[6]. 1995 ஆம் ஆண்டில் சீமோரின் மரணத்தின் பின்பு அவரது புதல்வன் டக்லஸ் துர்ச்ட், துர்ச்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்[7][8][9].
டக்லஸ் துர்ச்ட், தேசிய கடன் கடிகாரம் ஒரு பாகுபாடற்ற முயற்சியை பிரதிபலிகின்றது எனவும் ஒவ்வொரு தலைமுறைகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் "நாம் குடும்ப வணிகத்தில் இருக்கின்றோம்.ஒவ்வொரு தலைமுறைகளுக்காகவும் சிந்திகின்றோம் எனவே அடுத்த தலைமுறை இக் கடன் சுமையால் முடக்கபடுவதைக் காண நாம் விரும்பவில்லை" எனவும் தெரிவித்தார்[10]. டக்லஸ் துர்ச்ட் தனது தந்தை தேசியக் கடனின் சுமை பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதற்காக மிகவும் எளிமையான வழிமுறைகளைக் கையாண்டார் எனக் கூறினார். அதாவது 1980 களில் அவர் விடுமுறை நாட்களில் செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ்காரர்களுக்குப் (senators and congressmen) புது வருட வாழ்த்துடன் தேசிய கடனில் உங்கள் பங்கு $35000 என குறிப்பிட்டு அனுப்பிவைத்தார்[11]. எண்பதுகளின் முற்பகுதிகளில் துர்ச்ட் முதல் முறையாக தானாக, தொடர்ச்சியாகத் தகவலை புதுப்பிக்கும் கடிகாரத்தின் எண்ணத்தை முன்வைத்தபோதும் அதனை நடைமுறைபடுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பம் அப்போது கிடைக்கவில்லை[10].
1989 ஆம் ஆண்டு தேசிய கடன் கூ 2.7 (டிரில்லியன் டாலர்) ஆக இருக்கும் போது 11× 26 அடி அளவுடைய கடிகாரம் கூ100இ000 (ஒரு லட்சம் டாலர்) செலவில் நிர்மாணிக்கப்பட்டது[7]. இது டைம்ஸ் சதுக்கத்திலிருந்து ஒரு கட்டிடத் தொகுதி தள்ளி அமைந்துள்ள துர்ச்ட் கட்டிடத்தில் பொருத்தப்பட்டது. இக் கட்டிடம் 42 வது அவன்யூ மற்றும் ப்ரின்ட் பூங்காவின் வடக்குப் பகுதியை வடக்கு நோக்கி அமைந்திருந்தது. தேசிய கடன் கடிகாரம் நியூயார்க் இல் அமைந்துள்ள ஆர்ட்கிராப்ட் ஸ்ட்ராஸ் (Artkraft Strauss) நிறுவனத்தினால் நிர்மாணிக்கபட்டது. இக் கடிகாரம் புள்ளி அடிப்படையிலான காட்சி முறையையும் 5×7 காட்சி தெளிவையும் கொண்டமைந்துள்ளது. சீமோர் துர்ச்ட்டின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புவரை கணக்கீட்டு சாதனத்தை மோடம் மூலம் அவரே சரிசெய்து வந்தார்[7]. அவரது மரணத்தின் பின்பு ஆர்ட்லிராப்ட் ஸ்ட்ராஸ் நிறுவனம் புள்ளிவிபரங்களின் நடப்புத் தன்மையை பேணிவருகின்றது[7].
2000 ஆம் ஆண்டு தேசியக் கடன் நிலைமை செம்மையாகத் தொடங்கியதால் கடன் கடிகாரம் பின்னோக்கி இயங்க தொடங்கியது[8]. அதிகரித்து வரும் தேசியக் கடன் சுமையை வெளிப்படுத்தி காட்டுதல் கடிகாரத்தின் பிரதான நோக்காக இருக்கையில் கடிகாரம் பின்னோக்கி இயங்கியமை மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னோக்கி இயங்கும் போது செவ்வனே விளம்பரபடுத்தும் வகையில் கடிகாரம் வடிவமைக்கப்பட்டு இருக்கவில்லை. இதனால் 2000 ஆம் ஆண்டு தேசிய கடன் சுமை $5.7 டிரில்லியனாக இருக்கும் போதும் கடிகாரம் செயலிழக்கப்பட்டு சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளைத் திரைகளால் மூடப்பட்டது[10]. எனினும் கடிகாரம் பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. பின்னர் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரை நீக்கப்பட்டு மீண்டும் $6.1 டிரில்லியனில் தொடங்கி அதிகரித்து வரும் கடன் சுமையை காட்டத் தொடங்கியது[12].
2004 ஆம் ஆண்டு கடன் கடிகாரம் பின்னோக்கி செயற்படும் வகையில் மேம்படுத்தப்பட்டது. பின்னர் கடன் கடிகாரம் 42 ஆம் ஒழுங்கையில் இருந்து இடமாற்றப்பட்டு 1133 ஆம் ஒழுங்கையில் (பொதுவாக 1133 ஆறாவது ஒழுங்கை என்றழைக்ககப்படும்) அமைந்துள்ள துர்ச்ட் கட்டடத்தில் பொருத்தப்பட்டது (Durst building, 1133 Avenue of the Americas)[10][13].44வது ஒழுங்கையை நோக்கிக் காணப்படும் துர்ச்ட் கட்டடத்தின் பக்க சுவரில் இந்த இரண்டாவது கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. புதிய கடன் கடிகாரத்தின் எளிதாக வாசிக்கக் கூடிய தன்மையை அதிகரிப்பதற்காக ஏழு காட்சிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் பகு எண் எல்.இ.டி. (LED) இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது.
2007 ஆம் ஆண்டு தொடங்கிய நிதி நெருக்கடியின் பால் ஊடகங்களின் கவனம் இருந்தது. அவ்வேளை அமெரிக்க மொத்த கூட்டாட்சியின் கடன் 2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்று 10 டிரில்லியன் டாலர்களுக்கு மேலே உயர்ந்த போது அதனை வெளிப்படுத்தத் தேவையான இலக்கங்களின் எண்ணிக்கை தேசிய கடன் கடிகாரத்தில் போதுமாதாக இல்லை எனச் செய்தி அறிக்கைகள் வெளியாகின[1][2][3][4].
கடன் கடிகாரத்தில் மேலும் இரு எண்களை இணைப்பதன் மூலம் கடிகாரத்தில் ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது[14][15][16] .
டூம்ஸ் டே (Doomsday Clock) கடிகாரத்தில் அவ்வப்போது தகவல் புதுப்பிக்கபடும் முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தேசிய கடன் கடிகாரத்தில்தான் தொடர்ச்சியாக தகவல் புதுப்பிக்கப்படும் முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய கடன் கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட தொழினுட்பம் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் மேற்கோள்ளப்பட்ட ஒத்த வேறுபல திட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது[7][17] தேசிய கடனைக் கணக்கிடும் பல்வேறு சாதனங்கள் இணைய தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன[18].
தேசிய கடன் கடிகாரம் வேறு பல கணக்கீட்டு கருவிகளுக்கு (totalisers) அகத் தூண்டுதலாக இருந்தது. எடுத்துக்காட்டாக, மின்னணுசார் பலகையைப் (electronic billboard) பயன்படுத்தும் உயர்நிலை நுண் கருவிகள் (Advanced Micro Devices) பிரச்சாரத்தில், ரைவல் துணுக்கைப் (rival chip) பயன்படுத்துவதால் அதிகரிக்கக்கூடிய செலவீனம் கணக்கிட்டுக் காட்டப்பட்டது.[19].